வேதாரணியம் அக்டோபர் 27
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கரியாப்பட்டினம் அருகே மகாராஜபுரம் வயல்வெளியில் வலை வைத்து மடையான் பறவைகளை பிடித்தவருக்கு
அபராதம். திருச்சி மண்டல தலைமை வன பாதுகாவலர் சதீஷ், நாகப்பட்டினம் வன உயிரின காப்பாளர் கூடுதல் பொறுப்பு தஞ்சாவூர் மாவட்ட வன அலுவலர் அகில் தம்பி ஆகியோரின் உத்தரவுப்படி வேதாரணியம் வன சரக அலுவலர் பா அயூப் கான் தலைமையில்
வனவர் ராமதாஸ், மகாலட்சுமி வேட்டை தடுப்பு காவலர்கள் லோகநாதன், நவநீதகிருஷ்ணன் ,பாண்டியன் குழுவினர்களுடன் ரோந்து சென்றபோது கரியாப்பட்டினம் அடுத்துள்ள மகாராஜபுரம்
வயல்வெளியில் வலை வைத்து 6 மடையான் பறவைகளை
பிடித்த ஐயப்பன்
த/பெ பக்கிரி சாமி தலைக்காடு கிராமம் திருத்துறைப்பூண்டி தாலுகா
என்பவரை மடையான் பறவைகள் மற்றும் வலைகளுடன் பிடித்து விசாரணை செய்து வழக்கு பதிவு செய்யப்பட்டு நாகப்பட்டினம் வன உயிரின காப்பாளர் (கூடுதல் )
அகில் தம்பி உத்தரவின்படி ரூபாய் 25,000
இணக்க கட்டணம் பா.அயூப்கான்
வனசரக அலுவலரால் விதிக்கப்பட்டது.
பின்னர் உயிருடன் இருந்த ஆறு மடையான் பறவைகளை கால்நடை உதவி மருத்துவர் சிவசூரியன் மற்றும் வன பணியாளர்கள் முன்னிலையில் முனியப்பன் ஏரி சரணாலய பகுதியில் விடுவிக்கப்பட்டது. போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர் எல்விஸ் லாய் மச்சோடா.

