நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்டக் கருவூலம் மற்றும் அனைத்து சார்நிலைக் கருவூலங்களிலும் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் புத்தாக்கப் பயிற்சியினை மாவட்ட ஆட்சித் தலைவர் அ.அருண்தம்புராஜ் இன்று தொடங்கி வைத்தார்.
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக முதன்மை மாநாட்டுக் கூட்டரங்கில் மாவட்டக் கருவூலம் மற்றும் அனைத்து சார்நிலைக் கருவூலங்களிலும் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் புத்தாக்கப் பயிற்சியினை மாவட்ட ஆட்சித் தலைவர் அ.அருண்தம்புராஜ் இன்று தொடங்கி வைத்தார்.
நாகப்பட்டினம் மாவட்டக் கருவூல அலகில் 21,165 அரசு ஊழியர்களுக்கான ஊதியம் மற்றும் இதர பட்டியல்கள் மற்றும் 14,281 ஓய்வூதியர்களுக்கான பட்டியல்கள் அக்டோபர்-2020 முதல் பெற்றுவருகிறார்கள். இத்திட்ட நடைமுறைக்குப் பின்னர் விரைவாக பட்டியல்கள் ஏற்பளிப்பு செய்யும் நடவடிக்கைகளும், ஓய்வூதியத்தை உடன் பெறும் வாய்ப்பும் ஏற்பட்டுள்ளது. எனவே இப்பயிற்சி அனைவருக்கும் பயனுள்ளதாக அமையும் என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தார்.

இப்பயிற்சியி;ல் மாவட்டக் கருவூல அலுவலர் தி.சந்தானகிருஷ்ணன் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சு.ராமன், வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, காவல்துறை, நீதித்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை, போக்குவரத்துத்துறை, மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறை, கல்வித்துறை போன்ற பல்வேறு துறைகளைச் சார்ந்த அரசு ஊழியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர் எல்விஸ் லாய் மச்சோடா.

