நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாகூர் தர்காவில் நடைபெற உள்ள கந்தூரி விழாவை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் அ.அருண்தம்புராஜ் தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கு.ஜவகர் முன்னிலையில் நடைபெற்றது.
நாகப்பட்டினம் அக்டோபர் 26 நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாகூர் தர்காவில் நடைபெற உள்ள கந்தூரி விழாவை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் அ.அருண்தம்புராஜ் தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கு.ஜவகர் முன்னிலையில் நடைபெற்றது. கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ம.பிரதிவிராஜ் நாகப்பட்டினம் சார் ஆட்சியர் பானோத் ம்ருகேந்தர் லால் ஆகியோர் உடன் உள்ளனர்.
காவல்துறையினர் நாகூர் கந்தூரி விழாவின் போது நாகப்பட்டினம் முதல் நாகூர் வரை உள்ள பகுதிகளிலும் மற்றும் தர்காவை சுற்றியுள்ள பகுதிகளிலும் உரிய பாதுகாப்பு வழங்குதல், நகராட்சி ஆணையர் மற்றும் வட்டாட்சியருடன் இணைந்து ஊர்வலம் செல்லும் இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிட நடவடிக்கை மேற்கொள்ளுதல, வாகனம் நிறுத்துவதற்கு ஒதுக்கப்பட்ட இடத்தை தவிர வேறு இடத்தில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை அப்புறப்படுத்த வேண்டும். கூட்டம் அதிகம் உள்ள முக்கியமான இடங்களில் சி.சி.டிவி கேமராக்களை பொருத்தி கண்காணித்திட வேண்டும். போக்குவரத்திற்கு இடையூராக சாலைகளில் சுற்றி தெரியும் கால்நடைகளின் உரிமையாளர்கள் மீது தானாகவே முன்வந்து எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வருவாய்த்துறையினர் ஊர்வலம் செல்லும் இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிடவும் மற்றும் ஊர்வலம் சிறப்பாக நடைபெறவும் நகராட்சி மற்றும் குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் நாகப்பட்டினம் முதல் நாகூர் அருகில் உள்ள குப்பைகளை அகற்றி, ப்ளீச்சிங் பவுடர் தினமும் தெளிக்க வேண்டும், பழுதடைந்த தெரு விளக்குகள்,சாலைகளை சரி செய்து பொதுமக்கள் வசதியாக ஆங்காங்கே தற்காலிக கழிவறைகளை அமைத்திட வேண்டும். பக்தர்கள் அதிகம் கூடும் இடங்களில் குடிநீர் வசதி ஏற்பாடு செய்திட வேண்டும். மேலும் குளோரிசன் செய்யப்பட்ட சுத்தமான குடிநீரை வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். வாகனங்களை நிறுத்துவதற்கு ஏதுவாக பார்க்கிங் வசதி ஏற்பாடு செய்து தர வேண்டும். ஊர்வலம் வர ஏதுவாக நாகப்பட்டினம் முதல் நாகூர் வரை சாலையில் உள்ள வேகத்தடைகளை அகற்றிட வேண்டும்.
மருத்துவத் துறையினர் தேவைக்கேற்ப ஆம்புலன்ஸ் வாகனங்களை முக்கிய இடங்களில் நிறுத்தி, மருத்துவ முகாம்கள் அமைத்து இலவச மாத்திரைகள் விநியோகத்திடவும், எமர்ஜென்சிக்கான அனைத்து வசதிகளையும் வைத்திருக்க வேண்டும். கால்நடை பராமரிப்பு துறையினர் சாலைகளில் சுற்றி தெரியும் தெரு நாய்கள் மற்றும் கால்நடைகளை அப்புறப்படுத்திட வேண்டும் போக்குவரத்து துறையினர் சார்பில் தந்தூரி விழாவினை முன்னிட்டு கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்கப்படுவதை உறுதி செய்து, கந்தூரி விழாவிற்கு வெளி மாநிலத்திலிருந்து பக்தர்கள் வருகை புரிவதற்கு முக்கிய வழித்தடங்களில் இயக்கப்படும் பேருந்துகளில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஸ்டிக்கர் ஒட்டிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் சந்தனக்கூடு அன்று ஊர்வலம் செல்லும் நாளில் மின் ஒயர்களால் பாதிப்பு ஏற்படாதவாறு தொய்வான நிலையில் உள்ள மின் ஒயறுகளை முன்கூட்டியே சரி செய்திட வேண்டும், நெடுஞ்சாலைத்துறையினர் கனிவான கவனத்திற்கு நாகப்பட்டினம் காரைக்கால் இசிஆர் சாலைகளில் உள்ள மற்றும் ஈசிஆர் நாகூர் தர்காவிற்கு செல்லும் சாலையிலும் வேகத்தடை அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். மழையால் பழுதடைந்த சாலைகளை சரி செய்ய வேண்டும்.

தீயணைப்பு துறையினர் சார்பில் தர்கா குளம் மற்றும் நாகூர் கடற்கரையில் அசம்பாவிதங்கள் நடைபெறா வண்ணம் பைபர் படகுகளை தயார் நிலையில் வைத்து, விபத்து சமயத்தில் உதவ நீச்சல் வீரர்கள் மற்றும் தன்னார்வலர்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். வட்டார போக்குவரத்து அலுவலர் சார்பில் விழா காலங்களில் ஆட்டோ ஓட்டுநர்கள் அதிக கட்டணம் வசூல் செய்வதை கண்காணித்திட வேண்டும். முன்கூட்டியே ஆட்டோ ஓட்டுநர்களை அழைத்து ஆய்வு கூட்டம் நடத்திட வேண்டும். நாகூர் ரயில் நிலையத்திலிருந்து தர்காவிற்கு வரும் பக்தர்களுக்கு ஆட்டோ ஓட்டுநர்கள் அதிக கட்டண தொகை வசூல் செய்தால் உடனே அவர்கள் மீது தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பிஎஸ்என்எல் சார்பில் தடையில்லா தகவல் தொடர்பினை உறுதி செய்திட வேண்டும். பொதுப்பணித்துறை சார்பில் தர்கா குளத்தில் உடனடியாக சுற்றுச்சுவர் அமைத்து, விபத்துகளை தவிர்த்திடவும் தர்கா குளத்தில் நான்கு முனைகளிலும் உயர் கோபுர விளக்குகள் பொருத்தவும், குளத்தை சுற்றி மூன்று நடைபாதைகளிலும் குப்பை தொட்டிகள் வைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் அ.அருண்தம்புராஜ் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வி.சகிலா, நாகப்பட்டினம் நகராட்சி ஆணையர் என்.ஸ்ரீதேவி, தர்கா போர்டு ஆப் டிரஸ்டிகள் , மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்
எல்விஸ் லாய் மச்சோடா.

