• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

மாப்பிள்ளையூரணியில் 10 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட சாலைகளால் பொதுமக்கள் அவதி –  புதிய சாலை அமைக்க கோரி ஓட்டப்பிடாரம் எம்எல்ஏ மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை

policeseithitv by policeseithitv
October 25, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
மாப்பிள்ளையூரணியில் 10 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட சாலைகளால் பொதுமக்கள் அவதி –   புதிய சாலை அமைக்க கோரி ஓட்டப்பிடாரம் எம்எல்ஏ மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ஓட்டப்பிடாரம், அக்.25

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா தொகுதியில் உள்ள பொதுமக்களின் அடிப்படை பிரச்சனைகளை கண்டறிந்து அதனை உடனுக்குடன் சரி செய்து வருகிறார்.

அதனடிப்படையில் வருகிற பருவமழை காலத்திற்கு முன் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி, குண்டும் குழியுமாக உள்ள சாலைகளை சரிசெய்யும் பணி ஆகியவற்றை துரிதப்படுத்தி வருகிறார் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா.

மேலும் ஓட்டப்பிடாரம் தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சி பகுதியில் மக்கள் பிரச்சனைகளை மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து சரவணக்குமாரிடம் கேட்டறிந்து அதனை ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா அப்பகுதி மக்களுக்காக பல்வேறு பணிகளை செய்து வருகின்றார்.

இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியத் தலைவர் செந்தில்ராஜிடம் ஓட்டப்பிடாரம் எம்எல்ஏ கோரிக்கை மனு அளித்துள்ளார்.

அதில் தெரிவித்துள்ளதாவது: ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் மாப்பிள்ளையூரணி ஊராட்சி பகுதிகளில் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சாலைகள் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட சாலைகளாகும்.

இந்த சாலைகள் சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. மழைக்காலங்களில் மழைநீர் தேங்கியுள்ளதால் இச்சாலை வழியாக இருசக்கர வாகனங்களில் கூட செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால் விபத்து ஏற்படவும் வாய்ப்புள்ளது.

தாளமுத்து நகர் – டி.சவேரியார்புரம் சாலையில் சரள் மேம்பாடு செய்தல், மாதாநகர் -வண்ணார்பேட்டை சாலையில் சரள் மேம்பாடு செய்தல், ஏபிசி கல்லூரி – வடக்கு சோட்டையன்தோப்பு சாலையில் சரள் மேம்பாடு செய்தல் போன்ற பணிகளுக்கான மதிப்பீடு ஒன்றிய பொறியாளரால் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான போதிய நிதியும் உள்ளது. எனவே தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய பொது நிதியிலிருந்து சாலைகளில் சரள் மேம்பாடு செய்து தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என மாவட்ட ஆட்சியருக்கு ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா தனது கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளார்.

செய்தி தொகுப்பு

எம்.ஆத்தி முத்து

போலீஸ் செய்தி நியூஸ்

Previous Post

தூத்துக்குடி பள்ளியில் அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு

Next Post

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாகூர் தர்காவில் நடைபெற உள்ள கந்தூரி விழாவை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் அ.அருண்தம்புராஜ் தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கு.ஜவகர் முன்னிலையில் நடைபெற்றது.

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In