தூத்துக்குடி ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியர் பயிலும் இரண்டு மேல்நிலைப்பள்ளிகள் உள்ள தூத்துக்குடி இருதய பேராலய வளாகத்தில் மழைக்காலங்களில் வெள்ளநீர் தேங்குவதால் அங்கு மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

உடன் பேராலய பங்குத்தந்தை ரோலிங்டன், மாநகர மீனவரணி துணை அமைப்பாளர் ஆர்தர்மச்சாது, முன்னாள் கவுன்சிலர் செந்தில்குமார், மற்றும் சுரேஷ்குமார், உள்பட பலர் உடனிருந்தனர்.

