தூத்துக்குடியில் நாளை தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் “தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் மூலம் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நடக்கிறது.
இதில் பல முன்னணி நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளன. முகாமில் 10-ம் வகுப்பு, பிளஸ்-2, பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐ.டி.ஐ. மற்றும் கம்ப்யூட்டர் பயிற்சி முடித்தவர்கள் கலந்து கொள்ளலாம். தனியார் வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள வருபவர்கள் தங்களின் சுய விவரங்கள் மற்றும் கல்வி சான்றிதழ்களுடன் வர வேண்டும். தனியார் நிறுவனங்களில் பணி நியமனம் செய்யப்பட்டாலும், வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து ஆகாது. மேலும் விவரங்களுக்கு 90422 60644 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

