காவல்துறையில் வீரமரணமடைந்த காவலர்களின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் தூத்துக்குடி மாவட்டம், தென்பாகம் காவல் நிலையத்தில் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள் தலைமையில் ‘காவலர் வீர வணக்க நாள்” உறுதிமொழி ஏற்று துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டது.*
*♻️1959ம் ஆண்டு அக்டோபர் 21ம் தேதி லடாக் பகுதியில் ‘ஹாட் ஸ்பிரிங்ஸ்” என்ற இடத்தில் சீன இராணுவத்தினர் ஒளிந்திருந்து மேற்கொண்ட திடீர் தாக்குதலில் 10 மத்திய பாதுகாப்பு படை (CRPF) காவலர்கள் உயிரிழந்தனர். கடல் மட்டத்திலிருந்து பதினாராயிரம் அடி உயரத்தில் அன்று வீர மரணமடைந்த காவலர்களின் தியாகத்தை கடல் அலைகள் கண்ணுக்குத் தெரியும் இவ்விடத்தில் இருந்து நாம் இன்று நினைவு கூர்கிறோம்.*
*♻️கடற்கரையானாலும், பனிமலைச் சிகரமானாலும், காவலர் பணி, இடர் நிறைந்தது. உனது வருங்காலத்திற்கு எனது தற்காலத்தை ஈந்தேன். நாளை உன் விடியலுக்கு இன்று நான் மடியத் தயார் என்று கூறி இவ்வாண்டு இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நம்மைவிட்டு பிரிந்த காவல் குடும்பத்தினரின் எண்ணிக்கை 264. மடிந்த இவர்கள் விட்டுச் சென்ற பணிகளை செய்து முடிப்போம் என்று உறுதிபூண்டு, அவர்களின் வீரத்தியாகம் வீண்போகாது என்று இந்த காவலர் வீரவணக்க நாளில் உறுதி மொழி ஏற்கப்பட்டது.*
*♻️கடந்த 01.09.2021 முதல் 31.08.2022 வரை வீர மரணமடைந்த காவல்துறையினர் தமிழ்நாட்டில் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் திரு. பூமிநாதன், திரு. சந்திரசேகரன், காவலர் திரு. தேவராஜன், ஆந்திர பிரதேசத்தை சேர்ந்த ஆய்வாளர் திரு. ஈஸ்வரராவ் மற்றும் 7 பேர், அஸ்ஸாமை சேர்ந்த எஸ்.ஐ திரு. சமுட்ஜால் காகட்டி மற்றும் 3 பேர், பீகாரை சேர்ந்த எஸ்.ஐ திரு. பீரேந்திர குமார் பாஸ்வான் மற்றும் 6 பேர், சட்டீஸ்கரை சேர்ந்த தலைமை காவலர் திரு. சாலீக் ராம் மார்க்கம் மற்றும் 2 பேர், கோவாவை சேர்ந்த காவலர் திரு. விஸ்வாஸ் தேய்கர் மற்றும் ஒருவர், குஜராத்தை சேர்ந்த யூ.எச்.சி திரு. மன்சூக் கபபாய் பால்தியா மற்றும் 4 பேர், காவலர்கள் திரு. பிரவீன்பாய் கோபால்பாய் பூலியா, திரு. கிரன்சின் ஜெய்மால்ன்சின் ராஜ், திரு. நீலேஷ்குமார் கான்ஷியாம்பாய் தபி, ஹரியானாவை சேர்ந்த காவல் துணை கண்காணிப்பாளர் திரு. சுரேந்திர் சிங் மற்றும் ஒருவர், ஹிமாச்சல் பிரதேசத்தை சேர்ந்த காவலர் திரு. சுபம் மற்றும் ஒருவர், ஜார்கண்ட்டை சேர்ந்த காவலர் தாக்கூர் ஹேம்ப்ராம் மற்றும் ஒருவர், கர்நாடாகவை சேர்ந்த பி.எஸ்.ஐ திரு. அவினாஸ் கே. மற்றும் 10 பேர், கேரளாவை சேர்ந்த எஸ்.ஏ.பி காவலர் திரு. ஸ்ரீ பாலு, மத்தியபிரதேசத்தை சேர்ந்த ஆய்வாளர் திரு. கே. எல். ரத்தோர் மற்றும் 15 பேர், மணிப்பூரை சேர்ந்த காவலர் திரு. மோய்ரங்தேம் இன்கோச்சா சிங், நாகலாந்தை சேர்ந்த லேன்ஸ் நாயக் திரு. விகேகூ சேமா, ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ஹவில்தார் திரு. சூர்ஜயா கண்டா சம்ப்ட்டி மற்றும் ஒருவர், ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த காவலர் திரு. பின்ட்டு சவுத்ரி மற்றும் 2 பேர், சிக்கிம் மாநிலத்தை சேர்ந்த ஏ.எஸ்.ஐ திரு. சன்டா பிர் தமாங் மற்றும் 5 பேர், திரிபுரா மாநிலத்தை சேர்ந்த ஆய்வாளர் திரு. சத்யஜித் மாலிக், உத்திர பிரதேசத்தை சேர்ந்த எஸ்.ஐ திரு. கதிர் கா மற்றும் 6 பேர், உத்திரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த எஸ்.ஐ திரு. அமர் பால் சிங் மற்றும் 5 பேர், டெல்லியை சேர்ந்த எஸ்.ஐ திரு. சஞ்சீவ் லோச்சன் சர்மா மற்றும் 4 பேர், மேற்கு வங்காளத்தை சேர்ந்த எ.எஸ்.பி திரு. பிரசாந்தா குமார் நன்டி மற்றும் 17 பேர், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த எஸ்.ஐ திரு. பரூக் அகமது மிர் மற்றும் 36 பேர், எல்லை பாதுகாப்பு படையைச் சேர்ந்த டி. சி.எம்.டி திரு. ராஜேஷ் குமார் மற்றும் 26 பேர், மத்திய தொழில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த் ஏ.எஸ்.ஐ திரு. ரஞ்சித்குமார் சாரங்கி மற்றும் 5 பேர், மத்திய பாதுகாப்பு படையைச் சேர்ந்த துணை படை தலைவர் திரு. சாந்தி பூசன் திரிகே மற்றும் 29 பேர், இந்தோ திபெத்தியன் எல்லை பாதுகாப்பு படையைச் சேர்ந்த ஏ.எஸ்.ஐ திரு. ராஜேந்திர சிங் மற்றும் 13 பேர், என்.எஸ்.ஜி யை சேர்ந்த மேஜர் திரு. உட்கர்ஷ் சகார், எஸ்.எஸ்.பியைச் சேர்ந்த தலைமை காவலர் திரு. மொஹட் அஸ்ரப் மற்றும் 2 பேர், என்.டி.ஆர்.எப் பிரிவை சேர்ந்த ஏ.எஸ்.ஐ திரு. அனில் குமார் கவுர் மற்றும் 3 பேர், அஸ்ஸாம் ரைபிள்ஸை சேர்ந்த கர்னல் திரு. விபிலவ் திரிபாதி மற்றும் 5 பேர், ரயில்வே பாதுகாப்பு படையைச் சேர்ந்த எஸ்.ஐ திரு. விஜய் சர்மா மற்றும் 16 பேர் ஆகிய மேற்படி 264 காவல்துறையினர் ‘உனது வருங்காலத்தில் எனது தற்காலத்தை ஈந்தேன்” என்று கூறி வீர மரணம் அடைந்துள்ளார்கள்.*
*♻️இந்த காவலர் வீர வணக்க நாளில் அவர்களின் தியாகத்தை போற்றும் வகையில் அவர்களுக்கு அரசு மரியாதையுடன் துப்பாக்கி குண்டுகள் முழங்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள் தலைமையில் அஞ்சலி செலுத்தி உறுதிமொழி எடுக்கப்பட்டது.*

*♻️இதனையடுத்து தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை காவல் ஆய்வாளர் திரு. சுடலைமுத்து மற்றும் உதவி ஆய்வாளர் திரு. நங்கையர்மூர்த்தி தலைமையில் ஆயுதப்படை போலீசார் 60 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தினர்.*
*♻️இந்த வீர வணக்க நாள் நிகழ்ச்சியில் தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் திரு. கார்த்திகேயன், தூத்துக்குடி ஊரக உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் திரு. சந்தீஷ் இ.கா.ப, விளாத்திகுளம் உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் திருமதி. ஸ்ரேயா குப்தா இ.கா.ப, காவல் துணை கண்காணிப்பாளர்கள் தூத்துக்குடி நகரம் திரு. சத்தியராஜ், சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு திரு. ஜெயராஜ், மணியாச்சி திரு. லோகேஷ்வரன், ஸ்ரீவைகுண்டம் திரு. மாயவன், கோவில்பட்டி திரு. வெங்கடேஷ், மதுவிலக்கு அமலாக்க பிரிவு திரு. சிவசுப்பு, காவல் ஆய்வாளர்கள் தூத்துக்குடி மாவட்ட தனிப்பிரிவு திரு. பேச்சிமுத்து, தூத்துக்குடி தென்பாகம் திரு. ராஜாராம், வடபாகம் திரு. ரபி சுஜின் ஜோஸ், தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையம் திருமதி. வனிதா, தூத்துக்குடி போக்குவரத்து பிரிவு திரு. மயிலேறும்பெருமாள், உட்பட காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவல்துறையினர் பலர் கலந்து கொண்டனர்.*

