.வேதாரணியம் அக்டோபர் 19
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் வட்டார ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் தமிழ்நாடு துளிர் வினாடி வினா போட்டிகள் 6முதல் 8 வரை ஒரு பிரிவாகவும்,9 முதல் 10 வரை ஒரு பிரிவாகவும்,11 முதல் 12 வரை ஒரு பிரிவாகவும் தனித்தனியாகவும் போட்டிகள் நடைபெற்றது. அதே போல தமிழ் வழியாகவும், ஆங்கில வழியாகவும் நடைபெற்றது.
வட்டாரதிலுள்ள 35 பள்ளிகலிருந்து (நடுநிலை, உயர்நிலை &மேனிலைப்பள்ளிகள் ) நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளும் ஆர்வமுடன் பங்கேற்றனர். மாணவர்களுக்கு துணையாக பள்ளி ஆசிரியர்களும், பெற்றோர்களும் வந்தனர்.

நிகழ்ச்சிக்கு ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் முருகேசன் தலைமை ஏற்றார். வினாடி வினா நிகழ்வுகளை தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில செயலாளர் M. S.ஸ்டீபன்நாதன் நிகத்தினார்.மாவட்ட தலைவர் ஐயா ஆரிப், மாவட்ட செயலாளர் பால இரணியன்,நல்லாசிரியர் C. நாகராசன் சிறப்பு பார்வையாளர்களாக பங்கேற்றனர்.
வட்டார நிர்வாகிகள் வே.சித்திரவேலு சத்யராஜ்,மணிமொழி, R.அரசமணி,S.அறிவொளி, செல்வகுமார், S.மணிவண்ணன், N. கௌரியம்மாள், புவனேஸ்வரி போன்றவர்களு
டன் வட்டார ஆசிரியர்கள் பங்கேற்றனார்.
போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர் எல்விஸ் லாய் மச்சோடா.

