வேதாரணியம்
அக்டோபர் 19 வேதாரண்யம் எஸ். எஸ். அறக்கட்டளை சார்பில் வேதாரண்யம் வட்டார அளவில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தில் சிறப்பு கவனம்பெறும் குழந்தைகளுக்காக பயிற்சியளிக்கப்படும் நெய்விளக்கு ஊராட்சி ஒன்றிய நடு நிலைப் பள்ளியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புத்தாடை, இனிப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நாகை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் M.K.C. சுபாஷினி தலைமை வகித்தார்.
நாகை மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளி கல்வி உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் D. சாந்தி,
வட்டாரக் கல்வி அலுவலர்கள் K. இராஜமாணிக்கம், வீ. இராமலிங்கம்
வட்டார வளமைய மேற்பார்வையாளர் ப. அசோக்குமார், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தலைமையாசிரியர் புயல் சு. குமார் வரவேற்றார்.
அறக்கட்டளைத் தலைவர் எஸ். எஸ். தென்னரசு புத்தாடை மற்றும் இனிப்புகளை வழங்கினார்.



அறக்கட்டளை செயலாளர் மல்லிகா தென்னரசு, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சின்னச்சாமி, ஊராட்சி மன்ற தலைவர் கவிதா தர்மராஜ்,
மருத்துவர் பூமதி மற்றும் சிறப்பாசிரியர்கள் வாழ்த்துரை வழங்கினர்.
நெய்விளக்கு ஊராட்சி ஒன்றிய நடு நிலைப் பள்ளி தலைமையாசிரியர் த. செல்வராணி
நன்றி கூறினார்.
போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்
எல்விஸ் லாய் மச்சோடா.

