வேதாரணியம் அக்டோபர் 19
சென்னையில்
சட்டசபையில் பேச அனுமதிக்காத தை கண்டித்து அதிமுக எம்எல்ஏக்கள் இன்று ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்த நிலையில் போலீசார் அனுமதி மறுத்தனர். தடையை மீறி கருப்புச்சட்டை அணிந்து உண்ணாவிரதம் இருக்க முயன்ற
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட ஆதரவு எம்எல்ஏக்களை போலீசார் கைது செய்தனர். இதை கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் நடத்தினர்.

அதன் ஒரு பகுதியாக இன்று வேதாரண்யத்தில் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு வேதாரணியம் அதிமுக நகர செயலாளர் நமச்சிவாயம் தலைமையில்
ஒன்றிய துணைத் தலைவர் அறிவழகன், பஞ்சநதிக்குளம் ஊராட்சி மன்றத்தலைவர் வீர தங்கம், கவுன்சிலர் ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர் வீரமணி, ஏ ஒன் மாரியப்பன்.,ஆற்காட்டு துறை ஜெகநாதன் மற்றும் அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள்
கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர். போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர் எல்விஸ் லாய் மச்சோடா.

