வேதாரணியம் அக்டோபர் 19
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பயிர் காப்பீடு செய்வதை தனியாரிடம் கொடுத்ததால் 2021 2022 ஆம் ஆண்டிற்கான பயிர் காப்பீட்டு தொகை விவசாயிகளுக்கு உரிய அளவு கிடைக்காததை கண்டித்தும் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் காப்பீடு வழங்க கோரியும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வேதாரணியம் தலைஞாயிறு ஒன்றிய குழுக்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு வேதை தெற்கு ஒன்றிய செயலாளர் பி.எஸ் பன்னீர்செல்வம்
தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் கோவை சுப்பிரமணியம் கண்டன உரையாற்றினார். மேலும் மாவட்ட குழு உறுப்பினர்கள் ஏ.நடராஜன் என் .கோபாலகிருஷ்ணன் எஸ் .கே பாண்டியன் ஜி.செல்வராசு
ஆகியோர் கண்டன உரையாற்றினர். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கலந்து கொண்டனர். இறுதியில் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.
போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர் எல்விஸ் லாய் மச்சோடா.

