நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள அண்ணா விளையாட்டு மைதானத்தில் இன்று காலை மாணவ மாணவிகள் விளையாட்டு பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது நெல்லை மாநகர சட்டம் ஒழுங்கு காவல் துணை கமிஷ்னர் ஸ்ரீனிவாசன் மாணவ மாணவிகளிடையே சாலைப் பாதுகாப்பு மற்றும் குற்ற நிகழ்வுகள் தங்கள் கண்முன் நடைபெற்றால் உடனே தனது அலைபேசிக்கு தகவல் தெரிவிக்கும்படி விளையாட்டு வீரர்,வீராங்கனைகளிடம் விழிப்புணர்வு உரையாற்றினார்கள் இந்நிகழ்ச்சியில் 200 க்கும் மேற்பட்ட விளையாட்டு வீராங்கனைகள் கலந்து கொண்டு பயன்பெற்றார்கள்.



