நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள ஏ.டி.எம். தனியார் மகளிர் கல்லூரியில் மாவட்ட இயக்க மேலாண்மை அலகு(மகளிர் திட்டம்) சார்பில் கல்லூரி சந்தை நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித் தலைவர் அ.அருண்தம்புராஜ் இன்று குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
நாகப்பட்டினம் அக்டோபர் 18
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள ஏ.டி.எம். தனியார் மகளிர் கல்லூரியில் மாவட்ட இயக்க மேலாண்மை அலகு(மகளிர் திட்டம்) சார்பில் கல்லூரி சந்தை நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித் தலைவர் அ.அருண்தம்புராஜ் இன்று குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

நாகப்பட்டினம் மாவட்டம் ஏ.டி..எம் மகளிர் கல்லூரியில் மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்தி பொருட்களை கொண்டு கல்லூரி சந்தை துவங்கப்பட்டது.
இந்த கல்லூரி சந்தையில் மகளிர் சுயஉதவிக் குழுவினரால் தயாரிக்கப்பட்ட பொம்மைகள் சணல் பைகள் செயற்கை ஆபரண பொருட்கள் இயற்கை மூலிகைப் பொருட்கள் போன்றவைகள் இடம் பெற்றுயிருந்தன. இச்சந்தை இன்று முதல் தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறும்.
மேலும் இக்கல்லூரியின் மூலம் அழகுக் கலை மற்றும் பிளம்பர் பயிற்சி முடிந்தவர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் சான்றிதழ் வழங்கினார்கள்.இந்நிகழ்ச்சியில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ.செல்வகுமார்மகளிர் திட்ட அலுவலர் உதவி திட்ட அலுவலர் காமராஜ் கல்லூரி முதல்வர் அன்புசெல்வி கல்லூரி ஆசிரியைகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துக்கொண்டனர். போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்
எல்விஸ் லாய்
மச்சோடா.