நாகப்பட்டினம் அக்டோபர் 18
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உலக விபத்து காய தினத்தை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, சார்பில் ஆசிரியர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கம் மற்றும் பயிற்சி முகாமினை மாவட்ட ஆட்சித் தலைவர் அ.அருண்தம்புராஜ் இன்று தொடங்கி வைத்தார்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது
அக்டோபர் 17-ம் தேதி உலக விபத்து காய தினமாக கடைபிடிக்கப்படுவதை முன்னிட்டு அன்று முதல் ஒருவாரம் உலக விபத்து காயம் குறித்த விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் உடற்காயத்தால் உண்டாகும் மரணத்தை தவிர்க்க கையாளவேண்டிய வழிமுறைகளை கடைபிடிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தவே இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது. பொதுவாக ஆசிரியர்கள் அனைவரும் மாணவர்களுக்கு சாலை விதிகளையும், செல்போன் பேசிக்கொண்டு , அதிவேகம் செல்வது, இருக்கை பெல்ட் அணியாமல் வாகனம் இயக்குவது, மது அருந்திவிட்டு வாகனம் இயக்குவது பேன்றவற்றை தவிர்த்து கவனமாக செயல்படுவதற்கான கற்றுத்தர வேண்டும். ஆசிரியராகிய அனைவரும் பள்ளி,கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு பாதுகாப்பாளராகவும், நல்ல ஒழுக்கம், நல்ல பழக்கம், கண்ணியம் மற்றும் தன்னம்பிக்கை போன்றவற்றை கற்றுக்கொடுக்க வேண்டும். முக்கியமாக போதைப்பொருள்கள், மதுபழக்கங்களுக்கு எதிராக மாணவர்கள் இருக்கவும், மாணவர்கள் செல் போன்களை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். இருசக்கர வாகனங்களை ஓட்டுவது போன்ற அனைத்தையும் தவிர்த்து படிப்பில் மட்டும் முழு கவனம் செலுத்துவதற்கும் உறுதுணையாக இருக்க வேண்டும். அனைத்து ஆசிரியர்களும் முதலுதவி பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.


மேலும், சாலை விபத்து சக மனிதர்களுக்கு இடையேயான சக வன்முறை, தீ விபத்து, கட்டிட இடிபாடு மற்றும் பிற விபத்துகளால் நமக்கு உடல் காயங்கள் ஏற்படுகிறது என்பதை அறிகிறோம்.
இதனால் நாமும், நாம் அருகில் உள்ள உற்றார், உறவினர்களும், நண்பர்களும் உடற்காயங்கள், எலும்பு முறிவு, கை, கால்கள் பிற உறுப்புகள் இழப்பு உள்ளிட்ட உடற்பாதிப்புகளாலும், வேலை இழப்பால் வருமான இழப்பு உள்ளிட்ட பொருளாதார பாதிப்புகளாலும், பாதிக்கப்படுகிறார்கள். என்பதும், சில இடங்களில் மிகவும் கவலைப்படும் விதமாக உயிரிழப்புகளும் ஏற்படுகிறது என்பதும் அறிவோம்.
இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகளையும் நாம் எடுப்போம் என்றும், மேலும் இதுபோன்ற விபத்துகளால் பாதிக்கப்பட்டவரை அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வேண்டும். அதன் பொருட்டு, விபத்து பகுதியில் இருந்து உடனடியாக அவசர உதவி எண்ணான 108-க்கு முதல் தகவல் தெரிவிக்கவும், அவசர ஊர்தி வரும்வரை ரத்தக் கசிவை கட்டுப்படுத்துவது, எலும்பு முறிவு ஏற்பட்ட இடம் நகராமல் இருக்க கட்டு போடுவது உள்ளிட்ட முதல் சிகிச்சைகளை செய்ய வேண்டும்.
மொத்தத்தில் காயங்களை குறைக்கவும், காயத்தால் பாதிக்கப்பட்டவரை பாதுகாக்கவும் தமிழக அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளிலும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தார்.
தொடர்ந்து, உடல் காய தடுப்பு மற்றும் மேலாண்மை உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் முன்னிலையில் அனைத்து ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் எடுத்துக் கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் எம்.கே.சி.சுபாஷினி இணை இயக்குநர் நலப்பணிகள் ஜோஸ்பின் அமுதா, மாவட்ட வள மைய அலுவலர் உமா மகேஸ்வரி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ.செல்வகுமார், பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.
போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர் எல்விஸ் லாய் மச்சோடா.

