• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அக்டோபர் 28ஆம் தேதி கல்வி கடன் மேளா நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சித் தலைவர் அ.அருண்தம்புராஜ் தகவல்

policeseithitv by policeseithitv
October 18, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அக்டோபர் 28ஆம் தேதி கல்வி கடன் மேளா நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சித் தலைவர் அ.அருண்தம்புராஜ் தகவல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அக்டோபர் 28ஆம் தேதி கல்வி கடன் மேளா நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சித் தலைவர் அ.அருண்தம்புராஜ் தகவல்

நாகப்பட்டினம் அக்டோபர் 18 உயர்கல்வி பயிலும் மாணவ மாணவிகள் எவ்வித இடையூறும் இல்லாமல் கல்வியினை தொடர வேண்டும் என்ற நோக்கத்துடன் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள அனைத்து தேசிய வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் பங்கு பெறும் கல்வி கடன் மேளா வருகின்ற அக்டோபர் 28 2022 வெள்ளிக்கிழமை அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் காலை 10 மணிக்கு நடைபெற உள்ளத

பல்வேறு காரணங்களால் பல குடும்பங்களின் நிதிநிலை பிரச்சனையால் மாணவர்கள் உயர்கல்வியைத் தொடர முடியவில்லை. அத்தகைய மாணவர்கள் அவர்களின் கனவுகளை நிறைவேற்றுவதை உறுதி செய்ய இந்த கடன் மேளா மூலம் அவர்களுக்கு உதவ மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. கல்வி கடன் மேளாவில் பங்கு பெறும் மாணவர்கள் எவ்வித பிணையம் இல்லாமல் ரூபாய் 7.50 இலட்சம் வரை கடன் பெற்றுக் கொள்ளலாம். கல்வி கட்டணம் ரூபாய் 4 இலட்சத்திற்கு மேல் ஏழரை இலட்சத்திற்குள் இருக்கும் பட்சத்தில் மூன்றாம் நபர் உத்தரவாதம் அளிக்க வேண்டும். மாணவர்கள் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில் 60 சதவீதம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பட்டியல் இன மாணவர்களுக்கு 55 சதவீதம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் . மேலும் மாணவர்கள் கவுன்சிலிங் தேர்வு நேர்காணல் மூலம் கல்லூரியில் சேர்ந்து இருக்க வேண்டும்.

மாணவர்களின் அருகாமையில் உள்ள வங்கி கிளை அல்லது சேமிப்பு கணக்கு வைத்திருக்கக்கூடிய வங்கி கிளையில் கல்வி கடன் விண்ணப்பிக்கலாம். மாணவர்கள் கீழ்கண்ட பட்டியலில் உள்ள ஆவணங்களை தயார் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் முதுகலை கல்வி பயில்வோருக்கு இளங்கலை பட்டய சான்றிதழ் அல்லது ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழ் இருக்க வேண்டும். மாணவர் மற்றும் பெற்றோர் இருவரின் ஆவணங்கள் (ஆதார் கார்டு பான் கார்டு)

மாணவர்கள் கல்லூரியில் பயில்வதற்கான சான்று மற்றும் கல்வி கட்டண அமைப்பு ஆண்டு வாரியாக, கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தில் சேர்க்கைக்கான சான்று. சாதி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், பெற்றோர் மற்றும் உத்தரவாதம் அளிப்பவர் வருமானச் சான்று, வங்கி கணக்கு புத்தகம் .

ரூபாய் 4 இலட்சத்திற்கு மேல் உத்தரவாதம் அடிப்பவரின் ஆவணங்கள், ஏழரை லட்சத்திற்கு மேல் கல்வி கடன் விண்ணப்பிப்பவர்கள் சொத்து பிணை பத்திரம் மற்றும் சொத்து தொடர்பான ஆவணங்கள் வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும்.

மேற்கூறிய ஆவணங்களை மாணவ, மாணவிகள் தயார் செய்த பின் வித்யாலட்சுமி இணைய முகப்பில் பொதுவான கல்வி கடன் விண்ணப்ப படிவம் மூலம் பூர்த்தி செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும். உங்கள் விண்ணப்பத்தின் மேன்நகல் சம்பந்தப்பட்ட வங்கிக்கு இணையம் வாயிலாக சென்றடையும்.

எனவே 28.10.2022 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ள கல்வி கடன் மேளா நிகழ்வில் தகுதியுடைய அனைவரும் பங்கு பெற்று பயனடைய வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் அ.அருண்தம்புராஜ் தெரிவித்துள்ளார். போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்

எல்விஸ் லாய்

மச்சோடா.

Previous Post

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள ஏ.டி.எம். தனியார் மகளிர் கல்லூரியில் மாவட்ட இயக்க மேலாண்மை அலகு(மகளிர் திட்டம்) சார்பில் கல்லூரி சந்தை நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித் தலைவர் அ.அருண்தம்புராஜ் இன்று குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

Next Post

முதலாளியும் தொழிலாளியும் இரு கண்கள் போன்றவர்கள் என போனஸ் வழங்கி மேயர் ஜெகன் பெரியசாமி பேசினார்.

Next Post
முதலாளியும் தொழிலாளியும் இரு கண்கள் போன்றவர்கள் என போனஸ் வழங்கி மேயர் ஜெகன் பெரியசாமி பேசினார்.

முதலாளியும் தொழிலாளியும் இரு கண்கள் போன்றவர்கள் என போனஸ் வழங்கி மேயர் ஜெகன் பெரியசாமி பேசினார்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In