சென்னை பெருநகர காவல் சார்பில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ மாணவிகளுக்கு சென்னை பெருநகர போலீஸ் கமிஷ்னர் , பரிசுகள் வழங்கி குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார்
சென்னை பெருநகர போலீஸ் கமிஷ்னர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவின்பேரில், 35 அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மூலம் அவர்களது காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குடிசைப் பகுதியில் வசிக்கும் குழந்தைகளின் திறனை மேம்படுத்தும் வகையில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த பேச்சுப்போட்டி கட்டுரைப்போட்டி கதை மற்றும் கவிதைப் போட்டி ஓவியப்போட்டி மாறுவேடப்போட்டி மற்றும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டது. அதில் 750க்கும் மேற்பட்ட குழந்தைகள் ஆர்வத்துடனும் உற்சாகத்துடன் கலந்துகொண்டனர் இந்த போட்டிகளில் வெற்றி பெற்ற 35 குழந்தைகளுக்கு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தில் வைத்து நடந்த நிகழ்ச்சியில் வெற்றி பரிசு வழங்கி வாழ்த்துரை வழங்கி உடன் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

