நாகப்பட்டினம் அக்டோபர் 17 நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டம் சார்பில் நடைபெற்ற உயர்தர உள்ளுர் பாரம்பரிய இரகங்களை பிரபலப்படுத்துவதற்கான கண்காட்சி மற்றும் கருத்தரங்கத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் அ.அருண்தம்புராஜ் இன்று தொடங்கி வைத்தார்.
நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கல், வேளாண் அறிவியல் நிலையத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டம் சார்பில் நடைபெற்ற உயர்தர உள்ளுர் பாரம்பரிய இரகங்களை பிரபலப்படுத்துவதற்கான கண்காட்சி மற்றும் கருத்தரங்கத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் அ.அருண்தம்புராஜ் இன்று தொடங்கி வைத்தார். உடன் தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழகத் தலைவர் என்.கௌதமன் தமிழ்நாடு தாட்கோ கழக தலைவர் உ.மதிவாணன் கீழ்வேளுர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.பி. நாகை மாலி ஆகியோர் இருந்தனர்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது .மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் அவர்களின் நிதிநிலை அறிக்கை 2022-23 அறிவிப்புகளின் படி வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தில் மாவட்ட அளவிலான விவசாய கருத்தரங்கு மற்றும் கண்காட்சி “உயர்தர உள்ளுர் பாரம்பரிய இரகங்களை பிரபலப்படுத்துவதற்கான கண்காட்சி – மரபு சார் கண்காட்சி நடத்திட தெரிவிக்கப்பட்டு அதன் படி உலக உணவு தினமான இன்று நடைபெறுகிறது.இக்கண்காட்சியில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாரங்களிலிருந்தும் உயர்தர உள்ளுர் பாரம்பரிய இரகங்களை சாகுபடி செய்து வரும் மற்றும் சாகுபடி செய்ய ஆர்வமுள்ள விவசாயிகள் கலந்து கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டு. மேலும் இக்கண்காட்சியில் வேளாண்மை பல்கலைக்கழக விஞ்ஞானிகள, சகோதரத்துறை அலுவலர்கள் மற்றும் அனுபவமுள்ள முன்னோடி விவசாயிகள் கலந்து கொண்டு பாரம்பரிய உயர்தர உள்ளுர் பாரம்பரிய இரகங்கள் குறித்து தொழில்நுட்ப உரையாற்றிட உள்ளார்கள். மேலும் பராம்பரிய உயர்தர உள்ளுர் இரகங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.


பாரம்பரிய நெல் ரகங்கள் விதை உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில், அரசால் நெல் ஜெயராமன் மரபுசார் நெல் ரகங்கள் பாதுகாப்பு இயக்கத்தின் கீழ் பாரம்பரிய நெல் விதைகள் விநியோக திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் தூயமல்லி, கருப்பு கவுனி ஆகிய பாரம்பரிய நெல் ரகங்கள் அனைத்து வேளாண்விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த பாரம்பரிய நெல் விதைகள் கிலோ ஒன்றுக்கு ரூ.25 நிர்ணயம் செய்யப்பட்டு, விவசாயிகளுக்கு 50 சதவீத மானிய விலையில் (ரூ.12.5 கிலோ) வேளாண் விரிவாக்க மையங்கள் மூலம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. விவசாயி ஒருவருக்கு அதிகபட்சமாக ஏக்கர் ஒன்றுக்கு 20 கிலோ விதை மட்டுமே வழங்கப்படும்.
‘கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம்” சார்பில் 90 கிராமங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் கிராம பஞ்சாயத்துகளைச் சேர்ந்த விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் வட்டம் குரவப்புலத்தை சேர்ந்த திருமதி சிவரஞ்சனி என்பவர் தனது விவசாய நிலத்தில் 1250 வகையான நெல் இரகங்களை விதைத்து அதனுடைய விதைகளை சேகரித்து வருகிறார்கள். அவரை இந்நேரத்தில் பாராட்டுவதில் பெருமைப்படுகிறேன். விவசாயத்தின் முக்கியத்துவத்தினை மாணவர்கள் அறிந்து விவசாயம் தழைத்தோங்க பங்கு அவசியமான ஒன்றாகும். என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தார்.
முன்னதாக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டம் சார்பில் உயர்தர உள்ளுர் பாரம்பரிய இரகங்களை பிரபலப்படுத்துவதற்கான கண்காட்சியினை மாவட்ட ஆட்சித் தலைவர் அ.அருண்தம்புராஜ் தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழகத் தலைவர் என்.கௌதமன் அவர்கள், தமிழ்நாடு தாட்கோ கழக தலைவர் உ.மதிவாணன் கீழ்வேளுர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.பி. நாகை மாலி ஆகியோர் பார்வையிட்டனர். இந்த ஆய்வுக்கூட்டத்தில் வேளாண்மை இணை இயக்குநர் ஜாக்குலா அக்கண்டராவ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் எஸ்.வெங்கடேசன், விவசாயிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர் எல்விஸ் லாய்
மச்சோடா.

