வேதாரண்யத்தை அடுத்த கோடியக்காடு ஊராட்சியில் வரும் முன் காப்போம் திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ முகாம் வேதாரணியம் அக்டோபர் 17 முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ முகாம் நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் வட்டம் கோடியக்காடு ஊராட்சியில் உள்ள சுந்தரம் அரசு உதவி தொடக்கப்பள்ளியில் நடைபெற்றது. இந்த நிகழ்வு ஊராட்சி மன்ற தலைவர் எஸ். தமிழ்மணி தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் த.சரவணன் மற்றும் உறுப்பினர்கள்
ஊராட்சி செயலாளர் திருமதி சுபா
பள்ளி தலைமை ஆசிரியர் இரா. நீலமேகம் மற்றும் ஆசிரியர்கள், வட்டார மருத்துவர் கே.சுந்தர்ராஜன், எஸ்.ராஜசேகர், திருமதி. கலா அனைத்து நிலை மருத்துவர்களும் வட்டார மேற்பார்வையாளர் சுகாதார ஆய்வாளர்கள்
ஆய்வக நுட்புணர்கள்
மருந்தாளுனர்கள்
மற்றும் வட்டார சுகாதார செவிலியர் பகுதி சுகாதார செவிலியர்கள், கிராம சுகாதார செவிலியர்கள், மருத்துவமனை பணியாளர்கள், மருத்துவ முகாமில் கலந்து கொண்டனர். இந்த மருத்துவ முகாமில் ரத்தப் பரிசோதனை, உயர் ரத்த அழுத்தம் பரிசோதனை, ஆண் பெண் இருபாலருக்கும் பொது மருத்துவம், கர்ப்பிணி பெண்களுக்கு சிறப்பு பரிசோதனை, கண் மருத்துவம், சித்த மருத்துவம், தோல் மருத்துவம், ECG பரிசோதனை ஆகியவைகள் பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்கப்பட்டது.


இந்த மருத்துவ முகாமிற்கு கோடியக்காடு கோடியக்கரை சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான மக்கள் கலந்துகொண்டு பயன் பெற்றனர் .
போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர் எல்விஸ் லாய்
மச்சோடா.

