நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளுர், திருக்குவளை மற்றும் நாகப்பட்டினம் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் ஈரப்பதத்தினை மத்திய உணவு கழகத்தின் சேமிப்பு மற்றும் ஆய்வு தரக்கட்டுப்பாடு மையம், (ஹைதராபாத்) துணை இயக்குனர் எம்.இசட்.கான் தலைமையிலான மத்திய குழுவினர் இன்று ஆய்வு மேற்கொண்டனர் மாவட்ட ஆட்சித் தலைவர் அ.அருண்தம்புராஜ் தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழகத் தலைவர் என்.கௌதமன் கீழ்வேளுர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.பி. நாகை மாலி ஆகியோர் உடன் இருந்தனர்.
நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளுர், திருக்குவளை மற்றும் நாகப்பட்டினம் வட்டத்திற்;குட்பட்ட பகுதிகளில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் ஈரப்பதத்தினை மத்திய உணவு கழகத்தின் சேமிப்பு மற்றும் ஆய்வு தரக்கட்டுப்பாடு மையம், (ஹைதராபாத்) துணை இயக்குனர் எம்.இசட்.கான் அவர்கள் தலைமையிலான மத்திய குழுவினர்.



இன்று ஆய்வு மேற்கொண்டனர்;. மாவட்ட ஆட்சித் தலைவர் அ.அருண்தம்புராஜ் தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழகத் தலைவர் என்.கௌதமன் கீழ்வேளுர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.பி. நாகை மாலி ஆகியோர் உடன் இருந்தனர்.
நாகப்பட்டினம் மாவட்டம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில் மத்திய குழுவினர் நெல் ஈரப்பதம் குறித்து மத்திய உணவு கழகத்தின் சேமிப்பு மற்றும் ஆய்வு தரக்கட்டுப்பாடு மையம், (ஹைதராபாத்) துணை இயக்குனர் எம்.இசட்.கான் அவர்கள், இந்திய உணவுக் கழகம், தரக் கட்டுப்பாடு பிரிவு தொழில் நுட்ப அலுவலர் சி.யூனிஸ் இந்திய உணவு கழகம் தரக் கட்டுப்பாடு உதவி பொது மேலாளர் குணால் குமார், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் தரக்கட்டுப்பாடு முதுநிலை மண்டல மேலாளர் செந்தில் ஆகியோர் அடங்கிய மத்;திய குழுவினர் கீழ்வேளுர் வட்டம் பட்டமங்கலம், வெண்மணி, திருக்குவளை வட்டம் வலிவலம், எட்டுக்குடி மற்றும் நாகப்பட்டினம் வட்டம் பெருங்கடம்பனூர், மேல நாகூர் ஆகிய நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். டெல்டா மாவட்ட பாசனத்திற்காக நடப்பாண்டு முன்கூட்டியே மே 24-ல், மேட்டூர் அணை பாசனத்திற்கு திறக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக குறுவை நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டு, அறுவடை பணிகள் நடைபெற்று வருகிறது .’நெல் கொள்முதல் நிலையங்களில் செபடம்பர் 1 முதல் நேரடி நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் நெல்லின் ஈரப்பதம் அதிகரித்துள்ளதையொட்டி நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.
இதைத் தொடர்ந்து, 22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய அனுமதி கேட்டு, மத்திய அரசுக்கு, தமிழக அரசு கடிதம் எழுதியது. இதையடுத்து, நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளுர் வட்டம் பட்டமங்கலம், வெண்மணி, திருக்குவளை வட்டம் வலிவலம், எட்டுக்குடி மற்றும் நாகப்பட்டினம் வட்டம் பெருங்கடம்பனூர், மேல நாகூர் ஆகிய நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்துள்ள நெல்லில் இருந்து மாதிரிகளை சேகரித்து இன்று மத்திய குழுவினரால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் நேரடி கொள்முதல் நிலையத்தில் நெல்லின் ஈரப்பதம் தொடர்பாக விவசாயிகளிடம் கருத்துக்களை மத்திய குழுவினர் கேட்டறிந்தனர்.
இவ்வாய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் வி.ஷகிலா , தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் ராஜராஜன், விவசாயிகள் மற்றும் அரசு அலுவலர்கள், உடனிருந்தனர்.
போலீஸ் செய்திகளுக்காக நாகை மாவட்ட
செய்தியாளர் எல்விஸ் லாய் மச்சோடா.

