நாகப்பட்டினம் மாவட்டம் கீச்சாங்குப்பம் ஊராட்சியில் அரசு நடுநிலைப்பள்ளியில் தொடு திரை கணினி வகுப்பினை ஓய்வுப்பெற்ற நீதியரசர் மற்றும் மாநில கல்விக்கொள்கை உயர்மட்டக் குழு தலைவர் முருகேசன் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் தொடங்கி வைத்தார்.
நாகப்பட்டினம் அக்டோபர் 14
நாகப்பட்டினம் மாவட்டம் கீச்சாங்குப்பம் ஊராட்சியில் அரசு நடுநிலைப்பள்ளியில் நமக்கு நாமே திட்டம் சார்பில் தொடு திரை கணினி வகுப்பினை ஓய்வுப்பெற்ற நீதியரசர் மற்றும் மாநில கல்விக்கொள்கை உயர்மட்டக் குழு தலைவர் முருகேசன் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் தொடங்கி வைத்தார்.
பின்னர் ஓய்வுப்பெற்ற நீதியரசர் தெரிவித்ததாவது.தமிழக அரசு கல்வியில் சமூக பொருளாதார கலாச்சார காரணிகள் மற்றும் பாதுகாப்பு சார்ந்த பிரச்சினைகள், புலம் பெயர் தொழிலாளர்களது பிரச்சனைகள், ஊட்டச்சத்துக்குறைபாடு, போதிய அடிப்படை வசதிகள் இல்லாமை, பள்ளிகளில் காணப்படும் குறைபாடுகள் மற்றும் வசதிகளின்மை, ஆசிரியர் பற்றாக்குறை போன்ற பின்னடைவுக்கான காரணங்களை கருத்தில் கொண்டு அரசு பள்ளிகளில் பயில்கின்ற மாணவர்கள் கல்வி மற்றும் கல்வி சார்ந்த இணை செயல்பாடுகள் கலை அறிவியல், விளையாட்டு ஆகிய அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்க வாய்ப்பு வழங்கும் விதமாக உருவாக்கப்பட்ட இந்த சிறப்பு திட்டத்தின் மூலம் கல்வியின் தரத்தை உயர்த்துவதே அரசின் நோக்கமாகும்.
அதன் அடிப்படையில் கீச்சாங்குப்பம் ஊராட்சியில் அரசு நடுநிலைப்பள்ளியில் நமக்கு நாமே திட்டம் சார்பில் தொடு திரை கணினி வகுப்பினை தொடங்கி வைக்கப்பட்டது. இந்த வகுப்பினால் மாணவர்கள் கல்வி திறன் மேம்பாடு அதிகரிக்கும், கற்றலுக்கு எளிமையாக இருக்கும், மாணவர்கள் தங்களுக்கு தேவையான பாடம் குறித்த விளக்கத்தினை மிகவும் துல்லியமாக அறிந்து கொள்ள உதவும். உலகளவில் கல்வி குறித்த தகவல்களை தொடுதிரை மூலம் தெரிந்துக்கொள்ளலாம். சுமார் ரூ.1.80 இலட்சம் மதிப்பிலான இந்த தொடுதிரையினால் தமிழ் மற்றும் ஆங்கிலம் வழி கல்வி பயிலும் மாணவ மாணவிகள் பயன்பெறுகின்றனர் என ஓய்வுப்பெற்ற நீதியரசர் தெரிவித்தார்.


தொடர்ந்து சிக்கல் ஊராட்சி கீழக்கரையிருப்பு கிராமத்தில் உள்ள வானவில் தொண்டு நிறுவனத்தின் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியினை பார்வையிட்டார். முன்னதாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு மீன்வளப் பல்கலை கழகத்தில் மண்டல அளவிலான கருத்துக்கேட்புக் கூட்டம் மாநில கல்விக்கொள்கை உயர்மட்டக் குழு தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாநில கல்விக்கொள்கை உயர்மட்டக் குழு உறுப்பினர்கள் சுல்தான் இஸ்மாயில் , அருணா ரெத்தினம் , இரா.பாலு ஜெய தாமோதரன் முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி மற்றும் அரசு அலுவலர்கள்
கலந்து கொண்டனர்.
போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர் எல்விஸ் லாய் மச்சோடா.

