வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரையில் அமையவிருக்கும் கண்காணிப்பு கோபுரம் கட்டப்படும் இடத்தினை சேதப்படுத்தியவர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா ? சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள்.
வேதாரணியம் அக்டோபர் 13
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கோடியக்காடு கோடியக்கரை கிராமத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவிலுள்ள சதுப்பு நிலப் பகுதியில் அமைந்துள்ள பறவைகள் சரணாலயத்தை கண்டுகளிக்க பல ஆண்டுகளாக ஆண்டு தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள், ஆராய்ச்சியாளர்கள், அரசு உயர் அதிகாரிகள் ,அரசியல் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் ,பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள் , இயற்கை ஆர்வலர்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் என இங்கு வலசை வரும் உள்நாட்டு வெளிநாட்டு பறவை இனங்களை கண்டுகளித்தும் ஆராய்ச்சியில் ஈடுபட்டும் இவ்விடம் அனைத்து நாட்டினரும் தெரிந்துகொள்ளும் வகையில்
பாயிண்ட் காலிமர் சரணாலயம் என பெயர் பெற்று உலக அரங்கில் பாதுகாக்கப்பட வேண்டிய பகுதியாக 17வது ராம்சார் பகுதியாக அறிவிக்கப்பட்டும் Eco Sensitive Zone பகுதியாகவும்,
கோடியக்காடு கோடியக்கரையில் பெருமைகளை உலகறியச் செய்தும், மத்திய மாநில அரசுகள் மூலம் இச்சரணாலயத்தையும் சுற்றுலாவையும் மேம்பட செய்ய பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வரப்படுகிறது.
இந்நிலையில் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மழைக்காலங்களில் சிலநேரங்களில் நீண்டதூரம் சென்று பறவைகளை கண்டுகளிக்க வேண்டியிருப்பதால் அனைத்து சுற்றுலா பயணிகளும் முழுமையாக சரணாலயத்தை கண்டுகளிக்க இயலாத சூழ்நிலை ஏற்படுவதைத் தவிர்க்கும் பொருட்டு இப்பகுதியில் கெம்பிளாஸ்ட் நிறுவனத்திற்கு சொந்தமான இடத்தில் கண்காணிப்பு கோபுரம் கட்டி சுற்றுலாப்பயணிகள் உபயோகத்திற்கு பயன்படவும
பைனாகுலர், டெலஸ்கோப் அமைத்து பறவை இனங்களை கண்டறியவும், அடையாளம் காணவும், வேட்டையாடுபவர்களை கண்டறிந்து
வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவும், தடைசெய்யப்பட்ட கடல்வாழ் உயிரினங்களை கடத்தல் மற்றும்
காவல் துறையினருடன் இணைந்து தீவிரவாதிகள் ஊடுருவல் நடமாட்டங்கள் இருப்பின் அதனை கண்காணிக்கவும் கண்காணிப்பு கோபுரம் கட்டப்படும் இடத்தை துறை மற்றும் அரசு உயர் அதிகாரிகள் தணிக்கை செய்து கண்காணிப்பு கோபுரம் கட்டும் இடத்தை தேர்வு செய்து கெம்பிளாஸ்ட் நிறுவனத்திடமிருந்து தடையின்மை சான்று பெற்று கட்டுமானப்பணி 06.10.2022 ம்
தேதி முதல் துவங்கப்பட்டுள்ளது. இந்நிலையில்
08.10.2022 தேதி இரவு கோடியக்காடு கிராமத்தை சேர்ந்த சில நபர்கள் ஒன்று சேர்ந்து கண்காணிப்பு கோபுரம் கட்டப்படும் இடத்திற்கு சென்று அங்கு செய்யப்பட்டுள்ள தரைமட்ட பூமி வேலையினை
சேதப்படுத்துவது வந்த தகவலை அடுத்து சரக வனவர் பெரியசாமி தலைமையில் பணியாளர்கள் ஒரு குழுவாக அவ்விடத்திற்கு சென்று பார்த்தபோது பலர் கும்பலாக சேர்ந்து செய்யப்பட்ட பணியினை முற்றிலும் சேதப்படுத்தியும்
மண்வெட்டி மற்றும் ஆயுதங்களை கொண்டு வெட்டப்பட்ட குழிகளை மூடி கொண்டு இருப்பதையும் பார்த்த வனத்துறையினர் அப்படிச் செய்யாதீர்கள் என்று சொன்னபோது
அவர்கள் வனக் காவலர்களை தகாத வார்த்தைகளால்
திட்டியும், அவர்கள் கையில் வைத்திருந்த ஆயுதங்களைக் கொண்டு தாக்கவும் முற்பட்டுள்ளனர்.

அவ்விடத்தில் சூழ் நிலை சரியில்லாததால் கண்காணிப்பு கோபுரத்தை சேதப்படுத்தி சிலரை அடையாளம் கண்டு அங்கு சென்ற வனத்துறையினர் அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.எனவே உலகப் புகழ் பெற்ற வன உயிரின சரணாலயம் பகுதியை காண வரும் சுற்றுலா பயணிகள் உபயோகத்திற்கும், சுற்றுலாவை மேம்படுத்தவும், பறவைகள் வேட்டையாடுபவர்கள் கண்டறிந்து வழக்குபதிவு செய்து நடவடிக்கை எடுக்கவும்,தடைசெய்யப்பட்ட கடல்வாழ் உயிரினங்களை கடத்தலை தடுக்கவும் மற்றும் காவல் துறையுடன் இணைந்து தீவிரவாதிகள் ஊடுருவல் நடமாட்டங்கள் இருப்பின் அதனை கண்காணிக்கவும் அரசால் தீர்மானிக்கப்பட்டு கட்டப்படும் கண்காணிப்பு கோபுரத்தை எவ்வித அச்சமுமின்றி அரசு பணியினை தடுத்து சேதப்படுத்தியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர்கள் தேடப்பட்டு வருகின்றனர்.
ஆகவே தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து தேடப்பட்டு வரும் குற்றவாளிகளை கைது செய்து கண்காணிப்பு கோபுரம் கட்டப்படும் பணி விரைவில் தொடர வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது. இந்த விசயத்தில் தமிழக அரசின் நடவடிக்கை என்ன என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர் எல்விஸ் லாய்
மச்சோடா.

