மதுரை,அக்,12
தூத்துக்குடியை தலைமையாகக் கொண்டு இசக்கிராஜாதேவர் அவர்களின் தலைமையில் கடந்த 2017 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட PMT அறக்கட்டளை பொதுமக்களுக்கான பிரச்சனைகளுக்காக குரல்கொடுக்கும் பொருட்டு இயக்கரீதியாக செயல்பட முடிவெடுத்து அதற்கான பூர்வாங்கபணிகளில் ஈடுபட்டு கிளைகள் முதல் ஒன்றிய,நகர,
மாவட்ட,மண்டல,மாநில நிர்வாகிகள் தமிழகம் முழுவதும் நியமித்து முழுமையான கட்டமைப்பை உறுதிசெய்து செயல்படத் துவங்கியது, அதனடிப்படையில் மாநிலம் முழுவதும் நியமிக்கப்பட்ட அனைத்து நிர்வாகிகளின் ஒருமனதான தீர்மானத்துடன் தலைமைப் பொறுப்பை ஏற்கும்பொருட்டு மாநில செயற்குழுக்கூட்டமானமதுரை ரிங்ரோடு பாண்டிகோவில் அருகில் உள்ள R.R.மஹாலில் நடைபெற்றது, இக்கூட்டத்தில் கலந்துகொள்ளும் பொறுட்டு மாநில முழுவதிலிருமிருந்தும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
செயற்குழுக்கூட்டத்திற்கு PMT மக்கள் பாதுகாப்பு இயக்க மாநில பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். தேனிமாவட்ட பொதுச்செயலாளர் மணித்தேவர் முன்னிலை வகித்தார்.மாநில அமைப்பு செயலாளர் வள்ளிக்கன்னுத்தேவர் கொள்கைவிளக்கவுரையாற்றினார் மாநில அமைப்பு செயலாளர் செல்ல சக்தி தேவர் இயக்ககட்டமைப்பு உறுதியுரையாற்றினார் .மாநில அமைப்பு செயலாளர் முத்துகிருஸ்ணன் இரங்கல் தீர்மானங்கள் வாசித்தார். மாநில இளைஞரணி
செயலாளர் சுந்தர்பாண்டியன் தீர்மான உரையாற்றினார். இறுதியில் மாநில அமைப்பு செயலாளர் ராஜசேகர் நன்றியுரையாற்றினார், நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இயக்க நிறுவனர் இசக்கிராஜாத் தேவர் தலைமையில் தலைமை இயக்க நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்
PMT மக்கள் பாதுகாப்பு இயக்கத்தின் மாநில செயற்குழு கூட்டத்தில் பல முக்கிய தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது.
குறிப்பாக PMT மக்கள் பாதுகாப்பு இயக்கத்தின் நிறுவனர் இசக்கிராஜா தேவர் இயக்கத்தின் தலைவராக கிளைகள் முதல் ஒன்றிய, நகர, மாவட்ட, மாநில நிர்வாகக்குழு கூட்டத்தில் தீர்மானத்தினை ஒருமனதாக ஏற்று இயக்கத்தின் தலைவராக முன்மொழிந்தனர்.
இந்த செயற்குழு
கூட்டத்திற்கு
சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் தடவியல் துறை இயக்குனர் விஜயகுமார், அகில இந்திய மறவர் அறக்கட்டளை தலைவர் முருகேசன், முன்னாள் காவல்துறை கண்காணிப்பாளர் சண்முகசாமி உட்பட முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இந்த செயற்குழு கூட்டத்தில்
PMT மக்கள் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் கடந்த 3 மாதங்களாக நியமிக்கப்பட்ட, மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர கிளைகள் மற்றும் சார்பு அணிகளின் நிர்வாகிகளின் நியமனத்திற்கு ஒப்புதல் அளிப்பதோடு புதிய நிர்வாகிகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் தெரிவிப்பது. என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழகத்தில் உள்ள மன்னர் பழங்கால கோவில்களை மத்திய தொல்லியல் துறை மூலம் முறையாக பராமரிக்க வேண்டும்.
முக்குலத்தோர் மக்கள் பெரும்பான்மையாக உள்ள சங்கரன்கோவில், நிலக்கோட்டை, கந்தர்வகோட்டை, மானாமதுரை ஆகிய சட்டமன்ற தொகுதிகள் 25 ஆண்டுகளுக்கு மேல் தனித்தொகுதியாக தொடர்வதால் அத்தொகுதிகளை வரையறை செய்து பொதுத்தொகுதியாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ் மண்ணை ஆண்ட மன்னர்களின் பெயரில் செயல்படும் கல்வி நிறுவனங்களின் புகழ் தலைத்தோங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
“தேசியமும், தெய்வீகமும் எனது இருகண்கள் என பாவித்த பசும்பொன் உ.முத்துராமலிங்கத்தேவரின் திருப்பெயரினை மதுரை விமான நிலையத்திற்கு சூட்ட வேண்டும்.”
வீரமங்கை வேலுநாச்சியாருக்கு தலைநகர் சென்னையில் முழு உருவ வெண்கல சிலை நிறுவ வேண்டும். அவரது வாழ்க்கை வரலாற்றினை மத்திய, மாநில அரசுகளின் பாடத்திட்டத்தில் இடம்பெறச் செய்ய வேண்டும்.
மேற்கண்ட தீர்மானங்கள் PMT மக்கள் பாதுகாப்பு இயக்கத்தின் மாநில செயற்குழுவின் ஒப்புதலுக்கு விடப்பட்டு குரல் வாக்கெடுப்பின் மூலமாக ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. மதுரையில் நடைபெற்ற இந்த மாநில செயற்குழு கூட்டத்திற்கு தமிழகம் முழுவதுமிருந்து சுமார் 1200 க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
செய்தி தொகுப்பு
எம். கண்ணன்
போலீஸ் செய்தி நியூஸ் சேனல்

