நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ஊராட்சி ஒன்றியம் போலகம் ஊராட்சியில் நடைபெற்ற மக்கள் நேர்காணல் முகாமில் 469 பயனாளிகளுக்கு சுமார் ரூ.42 லட்சத்து 40 ஆயிரத்து 440 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் வழங்கினார்.
நாகப்பட்டினம் அக்டோபர் 12
நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ஊராட்சி ஒன்றியம் போலகம் ஊராட்சியில் நடைபெற்ற மக்கள் நேர்காணல் முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் , தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் த என்.கௌதமன் நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் ஜெ.முகமது ஷா நவாஸ் ஆகியோர் முன்னிலையில் இன்று நடைபெற்றது.
இம்முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது . தமிழக அரசானது பல்வேறு திட்டங்களை பொதுமக்கள் பயன்பெறும் வகையில் செயல்படுத்தி வருகிறது. அரசு அறிவிக்கும் திட்டங்கள், உதவிகளை பெற அறிந்துகொள்ள முடியாத நிலையில் உள்ள மக்களை சந்திக்கும் ஒரு நிகழ்ச்சியே இந்த மக்கள் நேர்காணல் முகாமாகும். இதுபோன்ற அரசின் நல திட்டங்கள் மற்றும் உதவிகளை அறிந்து கொண்டு பயன்பெறும் வகையில் இம்முகாம் நடத்தப்படுகிறது.தற்போது நம் மாவட்டத்தில்போலகம் கிராமம் தேர்வு செய்து மக்கள் தொடர்பு முகாம் நடத்தப்பட்டு, மக்களிடம் 173 மனுக்களைப் பெற்று, அவர்களது குறைகளை நிவர்த்தி செய்யப்படும். இத்திட்டத்தின் மூலம் துறை சார்ந்த பல திட்டங்கள் பற்றி தொடர்புடைய அலுவலர்களே மக்களுக்கு தெரியப்படுத்துகிறார்கள்.
அவ்வாறு தமிழக அரசு அறிவிக்கும் எண்ணற்ற திட்டங்களை சரியான நபர்களுக்கு சரியான நேரத்தில் சென்றடைய வேண்டும். அப்படி சென்றடைந்தால் அத்திட்டம் வெற்றிபெற்றது என அர்த்தம். மேலும், உண்மையான கஷ்டத்தில் இருக்ககூடிய மக்களுக்கு உதவும் வகையில் மாவட்ட நிர்வாகம் முனைப்புடன் செயல்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.
இம்முகாமில் சமூகப்பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் 51 பயனாளிகளுக்கு மாதம் ரூ.1000 என 12 மாதத்திற்கு ரூ.6,12,000 மதிப்பீட்டில் முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்ட முதியோர் உதவித்தொகை, கணவரால் கைவிடப்பட்டோர் உதவிதொகை, விதவை உதவிதொகை, மாற்றுத்திறனாளி உதவிதொகை, வருவாய் துறை சார்பில் 78 பயனாளிகளுக்கு ரூ.11,70,000 மதிப்பீட்டில் இலவச வீட்டுமனை பட்டாவினையும், 161 மாணவர்களுக்கு ரூ.31,400 மதிப்பீட்டில் குடைகளையும், ஆதினக்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி மூலம் 26 பயனாளிகளுக்கு ரூ.20,29,500 மதிப்பீட்டில் விவசாய கடன் உதவித் தொகையினையும், வேளாண்மைத்துறை சார்பில் 10 பயனாளிகளுக்கு ரூ.9,390 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளையும், தோட்டக்கலைத்துறை சார்பில் 10 பயனாளிகளுக்கு ரூ.30,000 மதிப்பீட்டில் மா கன்று, காய்கறி விதைத்தளைகள் கத்தரி மற்றும் மிளகாய் குழித்தட்டு போன்றவைகளையும், மகளிர் திட்டம் சார்பில் 1 சுய உதவிக்குழுக்கு ரூ.2,00,000 மதிப்பீட்டில் கடன் உதவித் தொகையினையும், கால்நடை பராமரிப்பு துறை சார்பில் 1 பயனாளிகளுக்கு ரூ.56,000 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளையும் மற்றும் 5 பயனாளிகளுக்கு ரூ.2,500 மதிப்பீட்டில் தாது உப்புக் கலவை, தீவனம் போன்றவைகளையும், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் 5 பயனாளிகளுக்கு ரூ.5,000 மதிப்பீட்டில் ஊட்டச்சத்து பெட்டகத்தினையும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் 18 உலமாக்களுக்கு ரூ.93,150 மதிப்பீட்டில் மிதிவண்டிகள் என மொத்தம் 469 பயனாளிகளுக்கு சுமார் ரூ.42 இலட்சத்து 40ஆயிரத்து 440 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.


இந்நிகழ்ச்சியில் திருமருகல் ஒன்றியகுழு தலைவர் ஆர்.இராதாகிருஷ்ணன் திருமருகல் வட்டார ஆத்மாகுழு தலைவர் செல்வ செங்குட்டுவன், போலகம் ஊராட்சிமன்ற தலைவர் அ.பௌஜியா பேகம், நாகப்பட்டினம் வட்டாட்சியர் கி.கார்திகேயன், திருமருகல் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பொது மக்கள் திரளாக கலந்துக்கொண்டனர்.போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்
எல்விஸ் லாய்
மச்சோடா.

