நாகப்பட்டினம் அக்டோபர் 12
நாகப்பட்டினம் மாவட்டத்தில் பனை மரங்கள் பரவலாக ஏறத்தாழ 260 ஹெக்டர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பனை சாகுபடியை ஊக்குவிப்பதற்கும் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காகவும் தோட்டக்கலைத்துறை மூலம் பனை மேம்பாட்டு இயக்கம் 2022-23ம் ஆண்டில் சிறப்பு திட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ், 45,000 எண்கள் பனை விதைகள் 100 சதவீத மானியத்தில் ஒரு விதைக்கு ரூ.3 வீதம் வழங்கப்பட உள்ளது. பனை மரம் ஏறுவதற்கான உரிமம் வைத்துள்ள விவசாயிகளுக்கு, பனை மரம் ஏறுவதற்கும், அறுவடை செய்வதற்கும் உகந்த உபகரணங்கள் 75 சதவீத மானியத்தில் ஒரு அலகிற்கு ரூ.4,500 ம் வழங்கப்பட உள்ளது.
சிறந்த பனை ஏறும் இயந்திரத்தினை கண்டுபிடிப்பவர்கள் மாநில அளவிலான தெரிவுக்குழு மூலம் தேர்வு செய்யப்படுவோருக்கு ரூ.1,00,000 விருதாக வழங்கப்பட உள்ளது.
இத்திட்டம் தொடர்பான விபரங்களுக்கு நாகப்பட்டினம் மாவட்டம், வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகங்களை அணுகி பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ், தெரிவித்துள்ளார்.போலீஸ் செய்தி டிவிக்காக நாகப்பட்டினம் மாவட்ட செய்தியாளர்
எல்விஸ் லாய் மச்சோடா.

