வேதாரண்யத்தில் ஒன்றிய அளவில் நடைபெறும் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள ஆசிரியர்களுக்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி
வேதாரணியம் அக்டோபர் 12
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் எண்ணும் எழுத்தும் பயிற்சி வேதாரணியம் ஒன்றியத்தில் வேதாரணியம் கஸ்தூரிபா கன்யா குருகுலம் மற்றும் ஒன்றிய ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் நடைபெற்றது. ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பாடம் நடத்தும் இடைநிலை ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் கோ. காமராஜன் தலைமை உரையாற்றினார். மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன விரிவுரையாளர்
மற்றும் பயிற்சி ஒருங்கிணைப்பாளர் ந.ரவிசங்கர்,வட்டார கல்வி அலுவலர் ராஜமாணிக்கம்,இராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மொத்தம் எட்டு அறைகளில் மொத்தமாக 340 ஆசிரியர்கள் பயிற்சியில் கலந்து கொண்டனர்.



இந்தப் பயிற்சியானது
10.10.2022,11.10.2022,12.10.2022
ஆகிய மூன்று நாட்கள் நடைபெற்றது.
மாநில மாவட்ட அளவில் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் கருத்தாளர்களாக செயல்பட்டனர்.
பார்த்தசாரதி, நீலமேகம், லட்சுமி,கோகிலவாணி, வேதரத்தினம்,
தையல்நாயகி
ஆகியோர் பயிற்றுநராக செயல்பட்டனர்.
போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்
எல்விஸ் லாய்
மச்சோடா.

