எஸ்.பி.பட்டணம் ஊராட்சி பகுதியில் பயணியர் நிழற்குடை இராமநாதபுரம் எம்.பி. நவாஸ் கனி திறந்து வைத்தார் – பொதுமக்கள் பாராட்டு.
இராமநாதபுரம் மாவட்டம், திருவாடாணை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட எஸ்.பி.பட்டணம் இசிஆர் பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதிதிட்டம் 2019-20ன் கீழ் சுமார் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் பயணியர் நிழற்குடை திறக்கப்பட்டது.

எஸ்.பி.பட்டணம் இசிஆர் பகுதியில் நேற்று நடைபெற்ற பயணியர் நிழற்குடை திறப்பு விழாவிற்கு ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கே.நவாஸ்கனி திறந்து வைத்தார். திறப்பு விழா நிகழ்ச்சிக்கு வருகை தந்த எம்.பி. நவாஸ்கனிக்கு எஸ்.பி.பட்டணம் ஊராட்சி சார்பிலும், பொதுமக்கள் சார்பிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. எஸ்.பி.பட்டணம் பஞ்சாயத்து தலைவர் மற்றும் எஸ்.பி.பட்டணம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் எம்.சகுபர் சாதிக் ஆகியோர் தலைமையில் திறப்பு விழா நிகழ்ச்சி வெகுசிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டது.
திறப்பு விழா நிகழ்ச்சிக்கு வருகை தந்த நாடாளுமன்ற உறுப்பினர் கே.நவாஸ்கனிக்கு எஸ்.பி.பட்டணம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் எம்.சகுபர் சாதிக் பொன்னாடை போர்த்தி வரவேற்றார்.
இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள், வணிகர்கள், பயணியர்கள் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர். பின்னர் கே.நவாஸ்கனி எம்.பி-க்கு பாராட்டு தெரிவித்தனர். இதில் மங்களகுடி சித்திக், ஹபீப்ரகுமான் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

