வேதாரண்யத்தை அடுத்த அகஸ்தியம்பள்ளி நேதாஜி விளையாட்டு கழகத்தின் சார்பில் கபடி போட்டி நடைபெற்றது.
வேதாரணியம் அக்டோபர் 10
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த அகஸ்தியம் பள்ளியில் நேதாஜி விளையாட்டு கழகத்தின் சார்பில் கபடி போட்டி நடைபெற்றது.
இப்போட்டியில் நாகை திருவாரூர் காரைக்கால் தஞ்சை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து இருபத்தி ஐந்துக்கும் மேற்பட்ட கபடி அணியினர் கலந்து கொண்டனர்.

பரபரப்பாக நடைபெற்ற கபடி போட்டியில்
வேதாரணியம் அணி முதல் பரிசும் புஷ்பவனம் அணி இரண்டாம் பரிசும் அகஸ்தியன் பள்ளி அணி மூன்றாம் பரிசும் வானவன் மகாதேவி அணி நான்காம் பரிசு பெற்றனர். வெற்றி பெற்ற அணியினருக்கு வேதாரணியம் நகர்மன்ற உறுப்பினர் ராஜு,வேதாரணியம் சிறு உப்பு உற்பத்தியாளர்கள் இனணய செயலாளர் செந்தில் , ஐ என் டி யூ சி உப்பு தொழிலாளர்கள் சங்க துணைத் தலைவர் தங்கமணி ஆகியோர் ரொக்கப்பரிசு மற்றும் கோப்பையும் வழங்கினார்கள். போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர் எல்விஸ் லாய் மச்சோடா.

