திமுக துணைப்பொதுச் செயலாளராக கனிமொழி எம்.பி நியமனம்: விளாத்திகுளத்தில் திமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்!!!
விளாத்திகுளம் அக்,9
திமுக துணைப் பொதுச் செயலாளராக கனிமொழி எம்.பி புதிதாக நியமனம் செய்து அறிவித்தார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.
சுப்புலட்சுமி ஜெகதீசன் ராஜினாமா செய்ததை தொடர்ந்து திமுக துணை பொதுச் செயலாளர் பதவிக்கு கனிமொழி எம்.பி நியமிக்கப்பட்டுள்ளார்.
திமுக 15 ஆவது பொதுக்குழு தேர்தலில், கழக துணைப் பொதுச் செயலாளபார ஐ.பெரியசாமி, க.பொன்முடி, ஆ.ராஜா எம்.பி., அந்தியூர் செல்வராஜ் எம்.பி., ஆகியோர் மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மகளிர் அணி செயலாளராக இருந்து வரும் கனிமொழி எம்பி கூடுதலாக மாநில துணைப் பொதுச் செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில்
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளருமான கீதாஜீவன் ஆலோசனையின்படி, விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி. மார்கண்டேயன் அறிவுறுத்தலின் படி,விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் திமுக தொண்டர்கள் நிர்வாகிகள் உற்சாகமடைந்து வெடி வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
விளாத்திகுளம் பாரதியார் பேருந்து நிலையம் முன்பு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்
இந்த நிகழ்ச்சியில்
மாவட்ட பிரதிநிதிகள் கனகவேல்,
கிருஷ்ணகுமார்
வார்டு செயலாளர்கள்
ஸ்டாலின் கென்னடி,
அய்யனார்,
சுப்புராஜ்,
சிவசுப்பிரமணியன், தமிழரசன்,
தாளமாணிக்கம், மாரிராஜ்,
ஜெயசங்கர்,
சங்கர் வார்டு கவுன்சிலர்கள் வெங்கடேஷ்,
கலைச்செல்வி செண்பகராஜ், செல்வகுமார் முன்னாள் பேரூராட்சி வார்டு கவுன்சிலர்கள் ராமமூர்த்தி, ஆறுமுகம், புஷ்பராஜ் ,பேரூர் கழக நிர்வாகிகள் சுப்பையா,அக்ரி
பாலமுருகன் பேரூர் கழக இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் இதயக்கனி,
அருண்குமார் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி சமூக வலைதள பொறுப்பாளர்
ஸ்ரீதர் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
செய்தி தொகுப்பு
விளாத்திகுளம் செய்தியாளர் பூங்கோதை
போலீஸ் செய்தி நியூஸ்

