மழை வெள்ளப் பாதிப்பு இல்லாத மாநகராக தூத்துக்குடி விளங்க வேண்டும்
முதலமைச்சர் உத்தரவு :
மழைநீர் வடிகால் அமைக்கும் பணியை மின்னல் வேகத்தில் இரவு,பகல் பாராமல் செய்து வரும் மேயர் ஜெகன் பெரியசாமி!!
நிம்மதியில் பொதுமக்கள்!!
தூத்துக்குடி,அக்,9
தூத்துக்குடி மாநகராட்சியாக 2008ல் தரம் உயர்த்தப்பட்ட பிறகு 5 ஊராட்சி பகுதிகளை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டன. 2011ல் நடைபெற்ற மாநகராட்சி தேர்தலில் புறநகர் பகுதியில் இணைக்கப்பட்டு 60 வார்டுகள் உள்ளடக்கிய பகுதிகளாக மாநகராட்சி செயல்பட்டது. இதற்கிடையில் 5 ஆண்டுகளுக்கு மேலாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் இருந்ததால் புதிய திட்டங்கள் வகுக்கப்படாமல் வளர்ச்சி பணிகளும் பாதிக்கப்பட்டன. இதற்கிடையில் மாநரகாட்சி பகுதியான பிரையண்ட் நகர், முத்தம்மாள் காலணி, ரஹ்மத்நகர், தனசேகரன் நகர், உள்ளிட்ட பல பகுதிகளில் கடந்த காலங்களில் ஏற்பட்ட மழையால் பாதிக்கப்பட்டு பொதுமக்கள் வெளியில் வரமுடியாத அளவிற்கு தண்ணீர் தேங்கிய நிலையில் பைபர் படகு மூலம் பலர் மீட்கப்பட்டனர். சில குடும்பங்களுக்கு அரசின் சார்பில் தேவையான உதவிகளை செய்தனர். அப்போது எதிர்கட்சி தலைவராக இருந்த ஸ்டாலின் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று தமிழக முதலமைச்சராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பின் தூத்துக்குடியில் நடைபெற்ற இரண்டு நிகழ்ச்சிக்கு வருகை தந்த போது கடந்த காலத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு மழைநீர் தேங்காத வகையில் புதிய திட்டங்களை தயாரித்து அதை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார். பருவமழைக்கு முன்னிட்டு இந்தப் பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டார்.
இந்த நிலையில்
உள்ளாட்சி தேர்தலில் திமுக வெற்றி பெற்று தூத்துக்குடி மாநகராட்சி மேயராக ஜெகன் பெரியசாமி பொறுப்பேற்றார்.
இவர் மேயராக பொறுப்பேற்ற தினத்திலிருந்து
தூத்துக்குடி மாநகரின் வளர்ச்சிப்பணிகள், மற்றும் உள்கட்டமைப்பு பணிகளை இரவு பகல் பாராமல் செய்து வருகிறார்
முதல்வர் மு.க ஸ்டாலின் உத்தரவு படி மாநகராட்சி அதிகாரிகளுடன் பல்வேறு கட்ட புதிய திட்டங்கள் மேற்கொள்வது குறித்து ஆய்வு மேற்கொண்டு வரும் இவர் மழைகாலங்களில் தூத்துக்குடி மாநகரில் எந்த பகுதிகளிலும் மழைநீர் தேங்கி பொதுமக்கள் பாதிக்க படக்கூடாது என்றும் அனைத்து பகுதிகளிலும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணியை துரிதப்படுத்த வேண்டும் எனவும்
முதல்வர் உத்தரவை நாம் உடனே நிறைவேற்றி மழைக்காலங்களில் பொதுமக்களுக்கு எந்த சிரமமும் இல்லாமல் இருக்க நாம் பணியாற்ற வேண்டுமென
மாநகராட்சி அதிகாரிகளுடன் மேயர் கலந்து ஆலோசனை செய்து மழைநீர் வடிகால் அமைக்கும் பணியை தீவிரமாக செய்து வருகிறார். பொதுமக்கள்
பாதிக்கப்படாத வகையிலும் போக்குவரத்திற்கு இடையூர் இல்லாத வகையில் புதிய கால்வாய்கள் அமைக்கப்பட்டு கழிவு நீர் மழைநீர் கடலுக்கு செல்லும் வகையிலும் புறநகர் பகுதியில் உள்ள ஓடைகள் வழியாக செல்லும் வகையிலும் கால்வாய்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. மேற்கண்ட மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை மின்னல் வேகத்தில் செய்துவரும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர்
இரவு பகல் என்று பாராமல் நேரடியாக பணிகள் நடைபெறும் இடங்களை
ஆய்வு மேற்கொண்டு அசத்தி வருகிறார். ஓப்பந்ததாரர்களிடம் மழை காலத்திற்கு முன்பு முழுமையாக நல்ல முறையில் பணிகளை முடித்துக் கொடுக்க வேண்டும். என்று கேட்டுக்கொண்டார். தூத்துக்குடி மாநகரில் மழைக்காலம் என்றாலே பொதுமக்கள் அஞ்சி நடுங்கும் சூழ்நிலை மாறும் வகையில் தமிழக முதல்வர் உத்தரவு படி தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி மின்னல் வேகத்தில் செய்துவரும் மழைநீர் வடிகால் பணிகளை பார்த்து வரும் பொதுமக்கள் இந்த முறை மழை பாதிப்பு நம் நகரில் இருக்காது என நிம்மதி பெருமூச்சு விடுவதை காண முடிகிறது. நேற்று இரவு மேற்கண்ட பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது
மாநகர மீனவரணி துணை அமைப்பாளர் ஆர்தர்மச்சாது, மேயர் நேர்முக உதவியாளர் ரமேஷ், மற்றும் ஜோஸ்பர், பிரபாகர், நடராஜன், உடனிருந்தனர்.
செய்தி தொகுப்பு
எம்.ஆத்தி முத்து
போலீஸ் செய்தி நியூஸ்

