முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து தலைவரும் திமுக கிழக்கு ஒன்றிய செயலாளருமான சரவணக்குமார் வாழ்த்து பெற்றார்!
—————
திமுகவின் 15வது கட்சி தேர்தல் நடைபெற்றது. தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளராக மீன்வளம் மற்றும் கால்நடைத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மாவட்ட அவைத்தலைவராக அருணாச்சலம், துணைச்செயலாளராக ஜெயக்குமார் ரூபன், ஆறுமுகபெருமாள், சோபியா, பொருளராக ராமநாதன், செயற்குழு உறுப்பினர்களாக பிரம்மசக்தி, டேவிட்செல்வின், மாடசாமி, பொதுக்குழு உறுப்பினர்களாக சொர்ணகுமார், முத்துச்செல்வன், சாகுல்ஹமீது, இந்திராகாசி, ஆறுமுகப்பாண்டியன், ராஜலட்சுமி, ஒன்றிய செயலாளர்களாக தூத்துக்குடி கிழக்கு மாப்பிள்ளையூரண ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார், மேற்கு சுப்பிரமணியன், மத்திய ஜெயக்கொடி, ஒட்டப்பிடாரம் மேற்கு சண்முகையா எம்.எல்.ஏ, வடக்கு இளையராஜா, திருச்செந்தூர் ரமேஷ், ஆழ்வார் திருநகரி கிழக்கு சதீஷ்குமார், மத்தி நவீன்குமார், மேற்கு பார்த்திபன், உடன்குடி கிழக்கு இளங்கோ, மேற்கு பாலசிங், ஆகியோர் தலைமை கழகத்தால் அறிவிக்கப்பட்டனர். இதனையடுத்து அண்ணா அறிவாலயத்தில் தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீன்வளம் மற்றும் கால்நடைத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமையில் மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவரும் கூட்டுறவு கடன்சங்க தலைவருமான கிழக்கு ஒன்றிய செயலாளர் சரவணக்குமார் திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க. ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றார்.

