வேதாரண்யம், அக்.8:
நாகை மாவட்டம்,வேதாரணத்தில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் சார்பில் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் நினைவு நாளையொட்டி புகழஞ்சலி நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
வேதாரண்யம் ராஜாஜிபூங்கா எதிரே நடைபெற்ற நிகழ்ச்சியில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் படத்துக்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது
கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாவட்டத் தலைவர் புயல் குமார் தலைமை வகித்தார்.மாவட்டச் செயலாளர் தென்னடார் அம்பிகாபதி,கிளைத் தலைவர் தங்க.குழந்தைவேலு ஆகியோர் முன்னிலை வைகித்தனர்.
நிகழ்ச்சியில்,பெருமன்ற மாவட்ட துணைத் தலைவர் ப.பார்த்தசாரதி, கிளை துணைச் செயலாளர் செந்தில்நாதன், பொருளாளர் கோவி.ராசேந்திரன், நல்லாசிரியர் விருது பெற்ற வீ.வைரக்கண்ணு,எஸ்.செல்வராஜ்,கவிஞர் அ.மா.குணசேகரன், ஆசிரியர்கள் சத்தியராஜ், ஜெயராமன்,கவிஞர்கள் ராஜரெத்தினம், த.சுகன்யா,ர.அகிலா, பாலாஜி, இளைஞர் பெருமன்ற மாவட்டச் செயலாளர் மாரி.கார்த்திகேயன்,தஞ்சை ராமசுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர்.
போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்
எல்விஸ் லாய்
மச்சோடா

