• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடி மாநகரில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், நலன் கருதி மின்னல் வேகத்தில் நடைபெறும்  3ம் கேட் மேம்பாலம் பணி: வருகிற 11ம் தேதி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வருகிறது மேயர் ஜெகன் பெரியசாமி அதிரடி அறிவிப்பு! மாணவர்கள், பொதுமக்கள் பாராட்டு!!

policeseithitv by policeseithitv
October 8, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடி மாநகரில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், நலன் கருதி மின்னல் வேகத்தில் நடைபெறும்   3ம் கேட் மேம்பாலம் பணி: வருகிற 11ம் தேதி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வருகிறது மேயர் ஜெகன் பெரியசாமி அதிரடி அறிவிப்பு!  மாணவர்கள், பொதுமக்கள் பாராட்டு!!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி மாநகரில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், நலன் கருதி மின்னல் வேகத்தில் நடைபெறும்

3ம் கேட் மேம்பாலம் பணி: வருகிற 11ம் தேதி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வருகிறது மேயர் ஜெகன் பெரியசாமி அதிரடி அறிவிப்பு!

மாணவர்கள், பொதுமக்கள் பாராட்டு!!

——–

தூத்துக்குடி மாநகரில் முக்கிய பிரதான சாலையான 3ம் கேட் மேம்பாலம் இருந்து வருகிறது. அதில் கனரக, இலகு ரக வாகனங்கள் உள்பட பல வாகனங்கள் சென்று வருகின்றன. பள்ளி கல்லூரி மாணவர்கள் பொதுமக்கள் என இந்த மேம்பாலத்தின் நான்கு பகுதிகளிலும் சென்று பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில் பாலத்தில்

சில விரிசல்கள் விழுந்ததையடுத்து வரும் முன் காப்போம் திட்டம் போல் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் பாதுகாப்பு நலன் கருதி

அதை சீர் செய்ய வேண்டும் என்று பல்வேறு அமைப்பினர் கோரிக்கை வைத்தனர். பொதுமக்களின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றும் வகையில் பாலம் சீரமைக்கும் பணி இரவு பகலாக பணியாளர்களை கொண்டு நடைபெற்று வருகிறது. மேற்கண்டயை தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி இரவு பகல் பாராமல் நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக சில கல்லூரிகளுக்கு 11ஆம் தேதி கல்லூரி திறப்பதாலும் , பள்ளிகளுக்கு 12 12ஆம் தேதி காலாண்டு தேர்வு விடுமுறை முடிந்து பள்ளி திறப்பதாலும், மாணவர்களின் நலன் கருதி இந்த மேம்பாலப் பணியை இரவு பகல் பாராமல் பணியை முடிக்க மேயர் உத்தரவிட்டது மட்டுமல்லாமல் முழுவீச்சாக அந்தப்பகுதியில் நின்று அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கி மேம்பாலப் பணியை விரைவு படுத்தியுள்ளார். 12ஆம் தேதி பள்ளிகள் திறக்க உள்ள நிலையில் 11/10/2022 அன்று மேம்பாலம் செயல்பாட்டுக்கு வருகிறது என மேயர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

 

அதே போல் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் மற்றும் வடிகால் அமைக்கும் பணியையும் மழைகாலத்திற்குள் முடிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் மேம்பாலம் பணிகள் நடைபெறுவதால் 2ம் கேட் 4ம்கேட் 1ம் கேட் ஆகிய பகுதிகளையும் பீச்ரோட்டையும் பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று மேயர் தெரிவித்தது . போன்ற அறிவிப்பு மாநகர மக்களுக்கு பெரிதும் உதவியது தற்போது இந்த வழியாக வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் பயன்படுத்தி வருகின்றனர்.

 

இப்பணி 10ம் தேதி வரை நடைபெற்று நிறைவு பணிகள் முடிந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு 11ம் தேதி திறக்கப்படும் என்று மேயர் ஜெகன் பெரியசாமி அறிவித்துள்ளார். குறிப்பாக பள்ளி மாணவ மாணவியர்கள், கல்லூரி மாணவர்கள் அலுவலகப் பணிகளுக்கு செல்லும் பொதுமக்கள் என மாநகரில் உள்ள மக்கள் நலன் கருதி வருகிற 11-ஆம் தேதி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விடப்படும் என மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்திருந்தார்

மேயர் ஜெகன் பெரியசாமி எடுத்து வரும் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் பொதுமக்கள் உற்று கவனித்து அவரது செயல்பாடுகளை பாராட்டி வருகிறார்கள். தற்போது மாணவ மாணவியர்களின் நலன் கருதி போர்க்கால அடிப்படையில் மேம்பால பணியை முடிக்க பெரும் முயற்சி மேற்கொண்ட தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் அவருடன் இணைந்து மாநகர வளர்ச்சியில் சிறப்பாக செயல்படும் ஆணையர் சாருஸ்ரீ ஆகியோருக்கு பொதுமக்கள் மற்றும் மாணவர்கள், வாகன ஓட்டிகள் மனதாரப் பாராட்டி வருகிறார்கள். மேயர் நேற்று நள்ளிரவு மேம்பால பணியை துரிதப்படுத்த நேரில் சென்று ஆய்வு நடத்தினார்

இந்த ஆய்வின் போது மேயர் நேர்முக உதவியாளர் ரமேஷ், மற்றும் ஜோஸ்பர், பிரபாகர், மாநகராட்சி அதிகாரிகள், நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஆகியோர் உடனிருந்தனர்.

 

செய்தி தொகுப்பு

எம்.ஆத்தி முத்து

Previous Post

திருப்பூர் தனியார் காப்பகத்தை மூடவும், நிர்வாகி மீது சட்டப்படி குற்ற நடவடிக்கை எடுக்கப்படும் – சமூக நலத் துறை அமைச்சர் கீதா ஜீவன்

Next Post

வேதாரண்யத்தில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் நினைவு நாள்

Next Post
வேதாரண்யத்தில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் நினைவு நாள்

வேதாரண்யத்தில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் நினைவு நாள்

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In