இந்து முன்னணி மற்றும் அனைத்து அம்பாள்களின் அருட்சப்பர பேரணி கமிட்டி சார்பில்
மேயர் ஜெகன் பெரியசாமியிடம் முக்கிய கோரிக்கை மனு!!
இந்தியாவில் பிரதிபெற்ற தசரா நிகழ்ச்சி மைசூரில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதற்கு அடுத்தப்படியாக தமிழகத்தில் இந்துக்களின் முக்கிய நிகழ்ச்சியான தசரா நிகழ்ச்சி 10 நாட்களாக நடைபெறுகிறது. இந்நிலையில் தூத்துக்குடி மாநகர் மாவட்ட இந்து முன்னணி நடத்தும் அனைத்து அம்பாள்களின் அருட்சப்பர பேரணி வரும் 7ம் தேதி தூத்துக்குடியில் நடைபெறுவதையொட்டி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமியை அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்து இந்து முன்னணி தூத்துக்குடி மாநகர் மாவட்ட தலைவர் இசக்கிமுத்துக்குமார், அமைப்பாளர் சிவக்குமார், ஆகியோர் முக்கிய கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.
அவர்கள்
அளித்த கோரிக்கை மனுவில் தெரிவித்ததாவது, நவராத்திரி தசரா திருவிழாவில் இறுதி நிகழ்வாக தூத்துக்குடி மாநகரில் உள்ள திருக்கோவில் அம்பாள்களில் அருட்சப்பரபேரணி வரும் 5ம் தேதி முதல் 7ம் தேதி வரை 3 தினங்கள் நடைபெறுகிறது. அனைத்து திருக்கோவில்களிலும் சப்பரபேரணி 40 ஆண்டாக நடைபெறும் நிகழ்வு 7ம் தேதி மத்திய பாகம் காவல்நிலையம் அருகிலுள்ள விநாயகர் கோவிலிருந்து அனைத்து திருக்கோவில்களிலும் சப்பரபேரணி பெண்கள் கலந்து கொள்ளும் மாவிளக்கு ஊர்வலமாக வந்து சிவன்கோவில் முன்பு ரிஷப வாகனத்தில் எதிர்சேவை நிகழ்ச்சி ஆகியவை
இந்து முன்னணி மற்றும் அனைத்து அம்பாள்களின் அருட்சப்பரபேரணி கமிட்டி இணைந்து நடத்துகிறது. தூத்துக்குடி
மாநகர் முக்கிய பகுதிகளில் நடைபெறும் சப்பரவீதி உலா நிகழ்ச்சி நடைபெறும் பகுதிகளில் தடையின்றி சிறப்பாக அமைவதற்கு சாலையோரங்களில் உள்ள மரங்களின் கிளைகள் மாநகராட்சி பணிக்காக தோண்டப்பட்ட குழிகள் மற்றும் சிவன்கோவில் பெருமாள் கோவில் இடையேயுள்ள கழிவுநீர் ஓடை பள்ளம் ஆகியவற்றை சீரமைத்து தந்து அருட்சப்பரபேரணி சிறப்பான முறையில் நடைபெற உதவிட வேண்டும். என்று மேயர் ஜெகன் பெரியசாமியிடம் அளித்த மனுவில் கூறியுள்ளனர். மனுவை பெற்றுக்கொண்ட மேயர் ஜெகன் பெரியசாமி
வரும் 5ம் தேதி முதல் 7ம் தேதி வரை 3 தினங்கள் நடைபெற உள்ள சப்பர பேரணிக்கு
அனைத்து முன்னேற்பாடு பணிகளையும் மாநகராட்சி நிர்வாகம் மூலம் செய்து தரப்படும் என தெரிவித்துள்ளார். கோரிக்கை மனு மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்த மேயர் ஜெகன் பெரியசாமிக்கு
இந்து முன்னணி மற்றும் அனைத்து அம்பாள்களின் அருட்சப்பர பேரணி கமிட்டி சார்பில் நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.
இந்த நிகழ்வின்போது அனைத்து அம்பாள்களின் அருட்சப்பர பேரணி கமிட்டி பொதுச் செயலாளர் சண்முகபுரம் லட்சியபாதை சண்முகசுந்தரம், மற்றும் ஜோஸ்பர் ஆகியோர் உடனிருந்தனர்.

