சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் வேட்புமனு தாக்கல் பரபரப்பாக நடைபெற்று முடிந்தது. 72 கழக மாவட்டங்களுக்கும் வேட்பு மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இந்நிலையில் தான் செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் மாவட்டச் செயலாளர் தேர்தல் முடிவுகள் வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் தான் நேற்று திமுக சார்பில் 15வது பொதுத்தேர்தல் தொடர்பான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது
: திமுக கழக அமைப்பில் உள்ள 72 மாவட்டங்களில் 71 மாவட்ட செயலாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதில் 7 பேர் மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் 64 பேர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
திமுகவின் 15வது உட்கட்சி தேர்தல் பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகின்றது. மாவட்ட செயலாளர், அவைத்தலைவர், 3 துணைச்செயலாளர்கள், பொருளாளர், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களுக்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி தொடங்கி 25ஆம் தேதி வரை நடைபெற்றது.
சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் வேட்புமனு தாக்கல் பரபரப்பாக நடைபெற்று முடிந்தது. 72 கழக மாவட்டங்களுக்கும் வேட்பு மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இந்நிலையில் தான் செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் மாவட்டச் செயலாளர் தேர்தல் முடிவுகள் வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் தான் நேற்று திமுக சார்பில் 15வது பொதுத்தேர்தல் தொடர்பான பட்டியல் வெளியானது.
அதன்படி திமுகவின் பேரூர், ஒன்றிய, நகர, பகுதி, மாநகர மாவட்டங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட செயலாளர்கள், தலைமைச் செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள், மாநகர, மாவட்ட நிர்வாகிகளின் பட்டியல் வெளியானது. கட்சியின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் இந்த பட்டியலை வெளியிட்டுள்ளார். அதன்படி வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை முடிந்த நிலையில், 64 திமுக மாவட்ட செயலாளர்கள் போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். திமுக அமைப்பில் உள்ள 72 மாவட்டச் செயலாளர்களில் 7 மாவட்ட செயலாளர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளராக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளராக அமைச்சர் கீதாஜீவன்,
ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் ஆக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டு தூத்துக்குடிக்கு வருகை தந்த போது நிர்வாகிகள் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

