நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் கூடுதல் தலைமைச் செயலர் வருவாய் நிர்வாக ஆணையர் எஸ்.கே.பிரபாகர் தலைமையில் இன்று நடைபெற்றது.
நாகப்பட்டினம் செப்டம்பர் 29 நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் கூடுதல் தலைமைச் செயலர் வருவாய் நிர்வாக ஆணையர் எஸ்.கே.பிரபாகர் தலைமையில் இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கு.ஜவஹர் ஆகியோர் உடனிருந்தனர்.
பின்னர் வருவாய் நிர்வாக ஆணையர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது தமிழகத்தில் தென்மேற்கு பருவமழையால் கூடுதலான மழை கிடைத்துள்ளது. வரும் வடகிழக்கு பருவமழையால் இயல்பான மழை கிடைக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இக்காலகட்டத்தில் புயல், வெள்ளம் போன்ற இயற்கை இடர்பாடுகளை எதிர்கொள்ள கடலோர மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டி உள்ளது.


நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள 12 புயல் பாதுகாப்பு மையங்களும், 5 பல்நோக்கு பேரிடர் மையங்களும் ஆய்வு செய்து அனைத்து அடிப்படை வசதிகளும் உள்ளனவா என உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் சமுதாயக் கூடங்கள்;, திருமண மண்டபங்கள், முன்னெச்சரிக்கை அறிவிப்பு மையங்கள் உள்ளன. தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்ல தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. மேலும், இம்மாவட்டத்தில் அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஆண்,பெண் முதல்நிலை பொறுப்பாளர்கள் என 5000 முதல்நிலை பொறுப்பாளர்கள் உள்ளனர். தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் மற்றும் தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை அபாய குறைப்பு முகமை சார்பில் (பேரிடர் கால நண்பன்) ஆப்தமித்ரா திட்டத்தின் கீழ் 200 தன்னார்வலர்களுக்கான பேரிடர் கால பயிற்சி வகுப்பு முடித்து உள்ளனர். தாழ்வான பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேவையான 4700 மணல் மூட்டைகள், 65000 பாலிதின் பைகள், 20 யூனிட் மணல், சவுக்கு குச்சிகள் ஆகியவை இருப்பு வைக்கப்பட்டுள்ளது. கால்நடைகளை பாதுகாக்கும் வகையில் பாதுகாப்பான இடங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. தீயணைப்பு துறை, காவல்துறை உபகரணங்கள் மற்றும் மின் பகிர்மான கழகம் சார்பில் 7.5மீ மின் கம்பம் 500, 8மீ மின் கம்பம் 2000, 9மீ மின் கம்பம் 500, மின்மாற்றிகள் 75 போன்ற மின்சாதன உபகரணங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு மையத்தில் 1077, என்ற தொலைபேசி எண்கள் இயங்கி வருகிறது. இக்கட்டுப்பாட்டு மையத்தில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் அலுவலர்கள் பணியாற்றி வருகின்றனர். இயற்கை பேரிடர் காலங்களில் எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது, பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் ஆபத்தான நிலையில் உள்ள பழமையான மரங்கள், கட்டிடங்கள் இருந்தால் அது குறித்த தகவல்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கிவரும் கட்டுப்பாட்டு மையத்திற்கு தெரிவிக்கவும். அதனடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். என கூடுதல் தலைமைச் செயலர் வருவாய் நிர்வாக ஆணையர் தெரிவித்தார்.
முன்னதாக மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான பணிகள் குறித்து தீயணைப்பு துறை, காவல்துறை, போன்ற துறை சார்பில் வைக்கப்பட்டிருந்த மீட்பு உபகரணங்களையும், துறைவாரியாக வைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளையும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள இ-சேவை மையம் மற்றும் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு மையத்தினையும், அதனை தொடர்ந்து, பாப்பாகோவில் ஊராட்சியில் உள்ள பெருமாள் கோவில் குளத்தில் நடைபெற்ற பேரிடர் மீட்பு படையினர்களின் ஒத்திகை நிகழ்ச்சி, மற்றும் செருதூர் ஊராட்சியில் உள்ள புயல் பாதுகாப்பு மையத்தினையும் வருவாய் நிர்வாக ஆணையர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்வளர்இளம் பெண் குழந்தைகளுக்கு ஊட்டசத்தின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாணவிகளுக்கு ஊட்டச்சத்து விழிப்புணர்வு குறித்த கையேட்டினை கூடுதல் தலைமைச் செயலர் வருவாய் நிர்வாக ஆணையர் எஸ்.கே.பிரபாகர் வழங்கினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வி.ஷகிலா மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பெ.பெரியசாமி பேரிடர் மேலாண்மை வட்டாட்சியர் க.ரமாதேவி மற்றும் அனைத்து துறை அரசு உயர் அலுவலர்களும் கலந்து கொண்டனர்.
போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்
எல்விஸ் லாய் மச்சோடா .

