நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜே.ஆர்.டி டாடா நினைவு விருது சார்பாகவும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் சார்பாகவும் கர்ப்பிணி தாய்மார்கள் முன்பருவ கல்வி குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் விழா மற்றும் அரசு சாரா நிறுவனங்களுக்கு மக்கள் தொகை பெருக்கம் மற்றும் குடும்ப நலம் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கம் மாவட்ட ஆட்சித் தலைவர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் இன்று நடைபெற்றது.
நாகப்பட்டினம் செப்டம்பர் 28 நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜே.ஆர்.டி டாடா நினைவு விருது சார்பாகவும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் சார்பாகவும் கர்ப்பிணி தாய்மார்கள் முன்பருவ கல்வி குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் விழா மற்றும் அரசு சாரா நிறுவனங்களுக்கு மக்கள் தொகை பெருக்கம் மற்றும் குடும்ப நலம் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கம் மாவட்ட ஆட்சித் தலைவர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் இன்று நடைபெற்றது.
கடந்த ஆண்டில் மாநில அளவில் கர்ப்பிணி தாய்மார்கள் மரணம் அதிக அளவில் இருந்தது, அதனை தடுக்கும் வகையில் அனைத்து மருத்துவ துறை மற்றும் சுகாதாரத் துறையின் ஒத்துழைப்பின் அடிப்படையில் கர்ப்பிணி தாய்மார்களின் மரணம் இந்தாண்டு குறைந்துள்ளது வம்சம் என்கிற தாய் சேய் நல கட்டுப்பாட்டு மையம் 9442374310 என்ற தொலைபேசி எண்ணின் மூலம் அனைத்து கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் தொடர்பு கொள்ளும் வகையில் நம் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் கர்ப்பகாலத்தின் போதும், பிரசவத்தின் போதும், பிரசவத்திற்கு பின்பு ஏற்படும் சிக்கல்கள் குறித்தும் மேற்கண்ட எண்ணை தொடர்பு கொண்டு விளக்கங்கள் பெறலாம். கருக்கலைப்பு மற்றும் அது தொடர்பான அனைத்து செய்திகளையும் மருத்துவரின் ஆலோசனைகளின் பெயரில் அனைத்து அரசு மருத்துவமனைகளில் இலவசமாக மருந்துகள் பெற்றுக் கொள்ளலாம் கர்ப்ப காலத்தின் போது ஏற்படும் ரத்தசோகை உயர் ரத்த அழுத்தம் மற்றும் இருதயம் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களுக்கும் குடும்ப நலத்துறையின் சார்பாக குடும்ப கட்டுப்பாடு குறித்த முறைகளையும் இந்த தொலைபேசி எண்ணின் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.
மக்கள் தொகையை சமநிலைப்படுத்துதல் மற்றும் பேறுகால மரணத்தை தடுக்கும் நோக்கில் அரசு மருத்துவ நிலையங்களிலும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவ நிலையங்களிலும் குடும்ப நலத்திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இரண்டு மற்றும் இரண்டுக்கும் மேற்பட்ட குழந்தைகளை உடைய உயர் வரிசை பிறப்பு பிரசவங்களை தவிர்ப்பதன் மூலம் 20 விழுக்காடு மகப்பேறு மரணங்கள் தவிர்க்க முடியும் இதன் அடிப்படையில் நம் மாவட்டத்தில் உள்ள உயர் பிறப்பு வரிசை தாய்மார்களை நிரந்தர குடும்ப நல முறைக்கு உட்படுத்துவதற்காக தாய் காக்கும் திட்டம் துவங்கப்பட்டு அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிறப்பு குடும்ப நல அறுவை சிகிச்சை முகாம்கள் நடைபெற்று வருகின்றது. இத்திட்டத்தில் பயனடையும் தாய்மார்களுக்கு தமிழக அரசு வழங்கும் ரூ.600 உதவி தொகையுடன் நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சித் தலைவர் நிதியாக ரூ.1400 கூடுதலாக 2000 ரூபாய் வழங்குவதுடன் ஏராளமான நல உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றது என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் இணை இயக்குநர் அமுதா ஜோஸ்பின் , ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் (பொ) தமிமுன்னிசா, துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் மரு.விஜயக்குமார் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ.செல்வகுமார் மற்றும் அரசு அலுவலர்கள்; கலந்து கொண்டனர்.
போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர் எல்விஸ் லாய் மச்சோடா.

