நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறு பேரூராட்சி திருமண மண்டபத்தில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் சார்பில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் முதல் பொது குழு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் இன்று நடைபெற்றது.நாகப்பட்டினம் செப்டம்பர் 28 நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறு பேரூராட்சி திருமண மண்டபத்தில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் சார்பில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் முதல் பொது குழு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் இன்று நடைபெற்றது.
பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது.வாழ்ந்து காட்டுவோம் திட்டமானது (தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டமானது உலக வங்கியின் நிதி உதவியுடன் தொடங்கப்பட்ட ஒரு தனித்துவம் வாய்ந்த திட்டமாகும். இத்திட்டம் வறுமை ஒழிப்பு எனும் செயல்பாட்டையும் தாண்டி தொழில் மேம்பாடு நிதி சேவைகளுக்கு வழி வகுத்தல் மற்றும் வேலை வாய்ப்புகளை உருவாக்குதல் போன்றவற்றின் மூலம் ஊரக சமுதாயத்தில் வளம் மற்றும் நிலைத்த உயர்வினை உருவாக்கி பெரும் மாற்றத்தை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.


இத்திட்டத்தின் நோக்கம் தமிழ்நாட்டில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட வட்டாரங்களில் ஊரகத் தொழில் முனைவுகளை உருவாக்குதல், நிதி சேவைகளுக்கு வழி வகுத்தல் மற்றும் வேலை வாய்ப்பினை உருவாக்குதல் போன்றவை ஆகும் நாகப்பட்டினம் மாவட்டத்தில் நாகப்பட்டினம் வட்டத்தில் 29 ஊராட்சி கிராம ஊராட்சிகளுக்கும், தலைஞாயிறு வட்டத்தில் 24 ஊராட்சி கிராம ஊராட்சிகள் என மொத்தம் 2 வட்டங்களில் 53 கிராம ஊராட்சிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தலைமகள் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் அறிமுகம் தலைஞாயிறு வட்டாரத்தில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலமாக அமைக்கப்பட்ட ஆடு வளர்ப்பு, மாடு வளர்ப்பு, உளுந்து உற்பத்தி, நிலக்கடலை உற்பத்தி மற்றும் மீன் வளர்ப்பு உள்ளிட்ட உற்பத்தியாளர் குழுக்களை ஒருங்கிணைத்து தொழில்நுட்ப ஆதார நிறுவனம் வழிகாட்டுதலுடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் இந்நிறுவனத்தில் இயக்குநர்களாக உற்பத்தியாளர்கள் குழுக்களைச் சேர்ந்த 10 மகளிரை நியமனம் செய்துள்ளனர், இந்த நிறுவனத்தில் இதுவரை 329 பங்குதாரர்கள் தலா ரூ 1000 பங்கு தொகை செலுத்தி பங்குதாரர்களாக இணைந்துள்ளனர். இதன் மூலம் ரூ.3,29,000 பங்கு மூலதனமாக பெறப்பட்டுள்ளது. மேலும் இந்நிறுவனம் சிறப்பாக செயல்படும் வகையில் முதன்மை செயல் அலுவலர் மற்றும் கணக்காளர் பணியமர்த்தப்பட்டு செயல்பட்டு வருகிறது. மேலும் துறைகளில் முறைப்படி பதிவு செய்யப்பட்டுள்ளது .
விவசாயிகள் ஒன்றிணைந்து இலாபகரமான நிறுவனமாக தங்களை முறைப்படுத்திக் கொண்டு மற்றவர்களுக்கு உதவியாக இருந்து வழிகாட்டுதல். இந்த நிறுவனத்தின் மூலம் உற்பத்தியாளர் குழுக்களில் உள்ள பங்குதாரர்களுக்கு உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்களை மொத்தமாக கொள்முதல் செய்து பங்குதாரர்களுக்கு சந்தை விலையை விட குறைவாகவும், தரமாகவும் வழங்குதல். உற்பத்தியாகும் விளைபொருள்களை நிறுவனத்தின் மூலம் சரியான எடையுடன் கொள்முதல் செய்து சந்தை விலைக்கு குறையாமல் உரிய நேரத்தில் பண பட்டுவாடா செய்தல். இரு மடங்கு உற்பத்தி, மும்மடங்கு வருமானம் என்ற இலக்குடன் வேளாண்மை சார்ந்த பிற துறைகளில் திட்டங்களை அறிந்து உற்பத்தியாளர் குழுக்கள் மற்றும் பங்குதாரர்களுக்கு கிடைத்திட வழிவகை செய்தல். விவசாயிகள் தங்களுடைய விலைப் பொருள்களுக்கு தாங்களே விலை நிர்ணயம் செய்திடும் வகையில் விற்பனையாளர்களாகவும் ஏற்றுமதியாளர்களாகவும் செயல்பட வழிவகை செய்தல். உற்பத்தி செலவை குறைத்தல் மற்றும் வருமானத்தை அதிகரித்தல் என்ற இலக்குடன் வேளாண்மை சார்ந்த ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுதல்.
விதைகள் உரம் மற்றும் பூச்சி விரட்டி விற்பனை மையம் அமைத்தல். நிலக்கடலை உடைத்தல் மற்றும் மதிப்பு கூட்டுதல் மையம் நிறுவுதல. உளுந்து பயிறு உடைத்தல் மற்றும் தோல் நீக்கம் செய்து சிற்பம் கட்டி மற்றும் விற்பனை செய்தல். விவசாய கால்நடை வளர்ப்பு சம்பந்தப்பட்ட ஆலோசனை மையம் அமைத்தல். உம்பளச்சேரி நாட்டின பசுவின் பால் ஆகியவற்றை மதிப்பு கூட்டி விற்பனை செய்வதன் வழியாக உற்பத்தியாளர்கள் மற்றும் பங்குதாரர்களுக்கு கூடுதல் லாபம் கிடைக்க வழிவகை செய்தல் பிற துறை திட்டங்கள் மூலம் பயன்பெறும் வகையில் ஒருங்கிணைப்புடன் செயல்படுத்துதல் நிறுவனத்தின் மூலம் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை உள்ளூர் மற்றும் வெளியூர்களுக்கு சந்தைப்படுத்துதல் போன்றவைகள் இதன் எதிர்கால திட்டங்கள் என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தார்.
மேலும் இக்கூட்டத்தில் தலைமகள் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்திற்கு பதிவு சான்றிதழ்களையும், மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு சிறு,குறு தொழில் நிறுவனத்திற்கான சான்றிதழ்களையும், சமுதாய திறன் மற்றும் பண்ணை பள்ளிக்கான துவக்க நிதியினையும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மகளிர் திட்ட செயல் அலுவலர் சுந்தரபாண்டியன், தலைஞாயிறு ஒன்றியக்குழு தலைவர் ஆர்.ஜி.தமிழரசி, பேரூராட்சி தலைவர் செந்தமிழ்செல்வி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ.செல்வகுமார் பேரூராட்சி செயல் அலுவலர் குகன் மற்றும் அரசு அலுவலர்கள்; கலந்து கொண்டனர்.
போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர் எல்விஸ் லாய் மச்சோடா.

