• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

வேதாரண்யத்தில் வாட்ஸ்-ஆப் மூலம் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை- உடற்கல்வி ஆசிரியர் மீது போக்சோ சட்டம் பாய்ந்தது!

policeseithitv by policeseithitv
September 27, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
வேதாரண்யத்தில் வாட்ஸ்-ஆப் மூலம் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை- உடற்கல்வி ஆசிரியர் மீது போக்சோ சட்டம் பாய்ந்தது!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

நாகை,செப் ,27

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கத்தரிப்புலம் ஊராட்சியில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.

இந்த பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக

மருதூரை சேர்ந்தவர்

அசோகன் (வயது 38) பணியாற்றி வந்தார். இவர் அந்தப் பள்ளியில் படிக்கும் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவிகள் சிலரின் மொபைல் எண்ணிற்கு வாட்ஸ் அப்பில் ஆபாச தகவல் அனுப்பி உள்ளார். மேலும் பாலியல் ரீதியாக அடிக்கடி குறுந்தகவல் அனுப்பினார். மேலும் ஆசிரியர் அசோகன் தனது வீட்டின் அருகே டியூசனும் நடத்தி வந்துள்ளார். அங்கு படிக்க வரும் மாணவிகளுக்கு நேரடியாக பாலியல் ரீதியாகவும் தொல்லை கொடுத்து வந்ததாகவும் மாணவிகள் குற்றம் சாட்டினர்.

இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவிகளில் ஒருவர் பள்ளி தலைமை ஆசிரியர் குமாரிடம் புகார் அளித்தார். இதையடுத்து மாணவிகள் கொடுத்த புகார் நாகை மாவட்ட ஆட்சியர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.

அதன்பேரில் பள்ளிக்கு வந்த கரியாப்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மலர்கொடி, வி.ஏ.ஓ. ரவிக்குமார் மற்றும் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். புகார் கொடுத்த மாணவி உள்ளிட்ட மற்ற மாணவிகளிடம் தீவிர விசாரணை நடத்தினர். அதில் மாணவிகள் உடற்கல்வி ஆசிரியர் அசோகன் அடிக்கடி வாட்ஸ் அப்பில் பாலியல் ரீதியாக மெசேஜ், படங்கள் அனுப்பி தொல்லை கொடுத்து வருகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

இந்த சம்பவத்துக்கு இடையே உடற்கல்வி ஆசிரியர் அசோகன் கடந்த 19-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை மருத்துவ விடுப்பில் சென்று விட்டார். இதனால் அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்ட போது அவர் எடுக்கவில்லை.

புகார் குறித்து அவரிடம் விளக்க கடிதம் கேட்டு அவரது வீட்டு முகவரிக்கு விரைவு தபால்மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இது தொடர்பாக கரியாப்பட்டினம் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அசோகனை கைது செய்து புலன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவரது செல்போனில் உள்ள படங்கள் அனைத்தையும் தடய அறிவியல் அனுப்பப்பட்டு ஆய்வு செய்யப்படுகிறது. இந்த சம்பவம் நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர் எல்விஸ் லாய் மச்சோடா.

Previous Post

நாகப்பட்டினம் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் புதிய விற்பனை நிலையத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் அ.அருண்தம்புராஜ் இன்று குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.

Next Post

ஜே.ஆர்.டி டாடா நினைவு விருது சார்பாகவும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் சார்பாகவும் கர்ப்பிணி தாய்மார்கள் முன்பருவ கல்வி குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் விழா மற்றும் அரசு சாரா நிறுவனங்களுக்கு மக்கள் தொகை பெருக்கம் மற்றும் குடும்ப நலம் தொடர்பான விழிப்புணர்வு

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In