தூத்துக்குடி,
செப்,25
தூத்துக்குடி மாவட்டம் முலக்கரையை சேர்ந்த என்.வெங்கடேஷ் பண்ணையார் அவர்களின் 19 பதில் வீரவழிபாடு
26/09/2022 அன்று அம்மன்புரம் பண்ணையார் தோட்டத்தில் வைத்து காலை 6 மணி முதல் வீர வழிபாடு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது . இந்த நிகழ்ச்சியில் தமிழகம் முழுவதும் மட்டுமல்லாமல் பாம்பே உட்பட பல மாநிலங்களில் இருந்தும் இளைஞர்கள் பல்வேறு முக்கிய பிரமுகர்கள் வீர வழிபாட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்கள். நாளை நடைபெறும் இந்த நிகழ்ச்சி காலை 11 மணி அளவில் வெங்கடேஷ் பண்ணையார் நற்பணி இயக்க தலைவர் இளைய சூரியன் எஸ்.ஏ. சுபாஷ் பண்ணையார் அஞ்சலி செலுத்த இருக்கிறார். அனைத்து சமுதாய பிரமுகர்களும், அரசியல் தலைவர்கள் பங்கேற்கும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கு வீரவழிபாடு அழைப்பிதழை சுபாஷ் பண்ணையார் வழங்கினார்.


இவருடன்
வெங்கடேஷ் பண்ணையார் நற்பணி இயக்கத்தின்
மாநில செயலாளர் சொர்ணவேல்குமார், தெற்கு மாவட்ட செயலாளர் ஓடைசெல்வம், வடக்கு மாவட்ட செயலாளர்
அற்புதராஜ், வழக்கறிஞர் அணி செயலாளர் சிலுவை நாடார்,
நகர பொறுப்பாளர் துரை, அஸ்வின், சுந்தர், கேசவன் மற்றும் தெற்கு மாவட்ட திமுக இளைஞர் அணி துணை அமைப்பாளர் வக்கீல் ஜோதிராஜா, திமுக பகுதி செயலாளர் ஜெயக்குமார், மற்றும் லிங்கராஜா, அல்பட், படப்பை சுரேஷ், தங்கராஜ், அருண், உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

