சாத்தான்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒருவர் கொலை – சம்பவ இடத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.ஜெயக்குமார்நேரில் சென்று பார்வையிட்டு எதிரியை விரைந்து கைது செய்ய தனிப்படை அமைத்து உத்தரவிட்டார்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீழ பனைக்குளம் காட்டுபகுதியில் அதே பகுதியைச் சேர்ந்த தங்கதுரை மகன் யோவான் அற்புதராஜ் (36) என்பவர் இன்று காலை கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இது குறித்து தகவலறிந்த சாத்தான்குளம் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விசாரணை மேற்கொண்டனர்.


இச்சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.ஜெயக்குமார் சம்பவ இடத்தை நேரில் சென்று பார்வையிட்டு சாத்தான்குளம் துணை போலீஸ் சூப்பிரண்டு காட்வின் ஜெகதீஸ்குமார்; மேற்பார்வையில் சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளர் பெர்னாட் சேவியர் தலைமையிலான கால்துறையினர், தட்டார்மடம் காவல் நிலைய ஆய்வாளர் சாம்சன் ஜெபதாஸ் தலைமையிலான காவல்துறையினர் மற்றும் தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் கந்தசாமி தலைமையிலான காவல்துறையினர் அடங்கிய ஆகிய 3 தனிப்படையினர் அமைத்து எதிரியை விரைந்து கைது செய்ய உத்தரவிட்டார்.
மேற்படி உத்தரவின் பேரில் தனிப்படையினர் விசாரணை மேற்கொண்டதில் கொலை செய்யப்பட்ட யோவான் அற்புதராஜ் என்பவர் கீழ பனைகுளம் மேலத்தெருவைச் சேர்ந்த செல்லத்துரை (60) என்பவரின் மருமகளை அடிக்கடி தொந்தரவு செய்து, கடந்த ஆண்டு நவம்பர் 12ம்தேதி அன்று அந்த பெண்ணை அரிவாளால் தாக்கி கொலை முயற்ச்சியில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து சாத்தான்குளம் காவல்நிலைய போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர். இந்நிலையில் பிணையில் வந்த யோவான் அற்புதராஜ் மீண்டும் செல்லத்துரையின் மருமகளை தொந்தரவு செய்துள்ளார். இந்நிலையில் இதன் காரணமாக இன்று காலை செல்லத்துரை சாத்தான்குளம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட கீழ பனைகுளம் காட்டுபகுதியில் யோவான் அற்புதராஜை கொலை செய்தது தெரியவந்துள்ளது.
மேற்படி வழக்கின் எதிரி செல்லத்துரை என்பவரை விரைந்து கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.ஜெயக்குமார் தனிப்படையினருக்கு உத்தரவிட்டார்.

