செய்துங்கநல்லூர் பகுதியில் ஒவ்வொரு புதன் கிழமையும் வாரச்சந்தை என்பது சுற்றியுள்ள நூற்றுக்கும்
மேற்பட்ட கிராமங்களில் இருந்தும் மக்கள் தேடி வந்து பொருட்கள் வாங்கும் அளவுக்கு பிரசித்தி பெற்றது.
இங்கு மீன், கருவாடு, காய்கறிகள் , கோழி, தின்பண்டங்கள், பழங்கள் ஜவுளி என்று மக்கள் மக்கள் விரும்பி வாங்கக்கூடிய பொருட்கள் மலிவான விலையில் கிடைப்பது தனிச்சிறப்பு.
கடந்த சில மாதங்களாக வாரச்சந்தை பராமரிப்பு பணிகள் நடந்ததால் வியாபாரிகள் திருச்செந்தூர் திருநெல்வேலி மெயின் ரோட்டின் இருபுறமும் கடைகள் அமைத்து வியாபாரம் செய்தனர். பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் மிகவும் சிரமம்தான் என்றாலும் வேறு வழிஇல்லாததால் பொறுத்துக்கொண்டார்கள். ஆனால் தற்போது வாரச்சந்தை பராமரிப்பு பணிகள் முடிந்து திறக்கப்பட்ட நிலையிலும் இன்னமும் மெயின் ரோட்டின் இரு புரமும்தான் கடைகள் அமைத்து வியாபாரம் செய்கின்றனர். காவல் நிலையத்தின் முன்னாலேயே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டாலும் செய்துங்கநல்லூர் காவல் துறை கண்டு கொள்வது இல்லை என்பதுதான் வேதனை.
இதுகுறித்து வியாபாரி ஒருவர் தெரிவிக்கையில்:
வாரச்சந்தையின் உள்ளே அனைத்து கடைகளும் காலியாகவே உள்ளன.
இதில் மிக வேதனையான விஷயம் என்னவென்றால் எந்த கடைக்கும் எளிதில் செல்ல முடியாதபடிக்கு அணைத்து கடை வாசல்களிலும் சந்தை வியாபாரிகள் கடை போட்டு வியாபாரம் செய்கின்றனர். இது பொதுமக்களுக்கு செய்யும் இடையூறு எனவும், உங்களுக்கு ஒதுக்கப்பட்ட கடையில் பராமரிப்பு பணிகள் முடிவடைந்து விட்டது அந்த இடத்தில் வழக்கம் போல் வியாபாரம் செய்யலாமே என்று கூறியுள்ளார். மேலும் சாலையின் இருபுறமும் கடைகள் முன்பு ஆக்கிரப்பு செய்து வியாபாரம் செய்வதால் அந்த பகுதில் உள்ள வியாபாரிகள் பாதிக்கப்படுகிறார்கள். அதுபோல் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. ஆகையால் உங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் வியாபாரம் செய்யுங்கள் என அறிவுரை வழங்கினார்.
அறிவுரை வழங்கிய காவல் உதவி ஆய்வாளர் ஒருவரை கடந்த வாரம் பொதுமக்கள் முன்னிலையிலேயே உயர் அதிகாரி திட்டிவிட்டார். அவரும் இனிமேல் இந்த இடத்தில் வேலை செய்ய முடியாது என்று மாறுதல் வாங்கி சென்று விட்டதாக கூறப்படுகிறது.
ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஏன் இவ்வளவு ஆதரவு கரம் நீட்டுக்குகிறார் போலீஸ் உயர் அதிகாரி என அப்பகுதி மக்கள் மற்றும் வியாபாரிகள் வேதனையோடு அதிரடி எஸ்.பி.ஜெயக்குமார் அவர்கள் கவனத்திற்கு புகாராக எடுத்து சென்றுள்ளார்களாம்.
ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஏன் இவ்வளவு ஆதரவு கரம் நீட்டுக்குகிறார் போலீஸ் உயர் அதிகாரி என அப்பகுதி மக்கள் மற்றும் வியாபாரிகள் வேதனையோடு அதிரடி எஸ்.பி.ஜெயக்குமார் அவர்கள் கவனத்திற்கு புகாராக எடுத்து சென்றுள்ளார்களாம்.
வரும் புதன் கிழமை கூடும் வாரச்சந்தையில் சாலை ஆக்கிரமிப்பாளர்களை அகற்ற மாவட்ட நிர்வாகம், மாவட்ட காவல்துறை மற்றும் செய்துங்க பஞ்சாயத்து நிர்வாகத்தினர் என்ன நடவடிக்கை எடுக்க இருக்கிறார்கள் என்கிற பரபரப்போடு எதிர்பார்க்கிறார்கள் அப்பகுதியினர்.


