தினத்தந்தி அதிபர் பத்மஸ்ரீ டாக்டர் சின்னையா பா.சிவந்தி ஆதித்தனார் அவர்களின் 87 வது பிறந்த தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் சார்பில் மாவட்ட செயலாளர் மாலைசூடி அற்புதராஜ் தலைமையில் மாநில வர்த்தக அணி துணைச் செயலாளர் ரவி சேகர் தூத்துக்குடியில் சிவந்தி ஆதித்தனார் அவர்களின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்
இவ்விழாவில் மாவட்ட அவைத்தலைவர் கண்டிவேல் மாவட்ட துணைச் செயலாளர்கள் அருள்ராஜ், மில்லை தேவராஜ் மாவட்ட பிரதிநிதிகள் பழனிவேல், பெரியசாமி மாவட்ட வர்த்தக அணி செயலாளர் சிவசு முத்துக்குமார் மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் சகாயராஜ் மாவட்ட விவசாய அணி செயலாளர் சரவணன் மாவட்ட தொண்டர் அணி செயலாளர் முத்து செல்வம் மாவட்ட மாணவரணி செயலாளர் அகஸ்டின் மாநகர செயலாளர் உதயசூரியன் மாநகர தொண்டர் அணி செயலாளர் காமராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

