தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் மாற்றுக்கட்சியினர் தி.மு.கவில் இணையும் விழா:
கனிமொழி பங்கேற்று வாழ்த்தினார்..
தூத்துக்குடி, செப்,24
தூத்துக்குடி கலைஞர் அரங்கில், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் மாற்றுக்கட்சியினர் தி.மு.கவில் இணையும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்டு புதிதாகக் கழகத்தில் இணைந்துள்ளவர்களை திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி.வாழ்த்தினார்
இந்த நிகழ்வில், தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலாளரும், சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


