நாகப்பட்டினம், செப்டம்பர் 23
நாகப்பட்டினம் மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத்திட்டம் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டம் ஐந்தாம் ஆண்டு தொடக்க விழாவினை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் தொடங்கி வைத்தார்.
பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவதுஉயிர்க்காக்கும் மருத்துவ சிகிச்சைகளை கட்டணமில்லாமல் ஏழை மற்றும் குறைந்த வருவாய் பெரும் பொதுமக்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பெற வேண்டும் என்ற உயரிய நோக்குடன், உயிர்க்காக்கும் உயர் சிகிச்சைக்கான முதலமைச்சரின் கலைஞர் காப்பீட்டுத் திட்டம் 23.07.2009 அன்று தமிழ்நாடு அரசால் தொடங்கப்பட்டது. மக்கள் ஆரோக்கிய திட்டம், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத்திட்டடத்தின் 23.09.2018 முதல் ஒருங்கிணைந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது இத்திட்டம் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் சுமார் 1.37 கோடி குடும்பங்கள் (ஜனவரி 2022 முதல்) பயன்பெற்று வருகிறார்கள். இத்திட்டத்தில் பச்சிளங் குழந்தைக்களுக்கான சிகிச்சை முறை உள்பட 1,090 சிகிச்சை முறைகளும் 8 தொடர் சிகிச்சை வழிமுறைகளுக்கும் மற்றும் 52 பரிசோதனை முறைகளுக்கும் வழி வகை செய்யப்பட்டுள்ளது. 800 அரசு மற்றும் 900 தனியார் மருத்துவமனைகள் சிகிச்சைக்காக அங்கீகரிக்கப்பட்டுள்ளன.


இந்த திட்டத்தின் படி ஆண்டு வருமானம் ரூ.1இலட்த்தி 20 ஆயிரத்துக்கு குறைவாக உள்ள அனைத்து குடும்பங்களும் ஒரு ஆண்டிற்கு ரூ.5 இலட்சம் வரை கட்டணமின்றி சிகிச்சை பெறலாம். வருமான வரம்பு இல்லை விதவைகள், ஆதரவற்றோர்கள், வயது முதிர்வு ஓய்வு ஊதியம் பெறுபவர்கள், முகாம் வாழ் இலங்கைத் தமிழர்கள் மற்றும் முகாம்களுக்கு வெளியே வசிக்கும் பதிவு செய்த இலங்கை தமிழர்கள், மாற்றுதிறனாளிகள் ஆகியோர் இத்திட்டத்தில் சிகிச்சை பெறலாம்.சமர்பிக்க வேண்டிய ஆவணங்கள் குடும்ப அட்டை, வருமான சான்றிதழ் (ஆண்டு வருமானம்), குடும்ப உறுப்பினர்களின் ஆதார் அட்டை கொண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு அடையாள அட்டையினை பெற்றுக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.
பிரதம மந்திரி ஜன ஆரோக்கிய யோஜனா மற்றும் முதலமைச்சரின விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயனடைந்த 5 பயனாளிகளுக்கு நினைவு பரிசினையும், புதிதாக சேர்க்கை செய்யப்பட்ட 5 பயனாளிகளுக்கு அடையாள அட்டையினையும், மருத்துவ காப்பீட்டுத்திட்டத்தின மூலம் சிறப்பாக செயல்பட்ட மருத்துவமணைகளுக்கு பாராட்டு சான்றிதழையும் மற்றும் சிறப்பாக செயல்பட்ட மருத்துவக் காப்பீட்டு திட்ட தொடர்பு அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் இணை இயக்குநர் சுகாதார பணிகள் ஜோஸ்பின்அமுதா முதலமைச்சர் ன் விரிவான காப்பீட்டு மாவட்ட திட்ட அலுவலர் கே.கணேஷ் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
போலீஸ் தேதி டிவிக்காக
நாகை மாவட்ட செய்தியாளர் எல்விஸ் லாய் மச்சோடா.

