நாகப்பட்டினம் மாவட்டத்தில் நெல் சேமிப்பு கிடங்கு நெல் கொள்முதல் நிலையம் கூட்டுறவு கடன் சங்கம் ஆகியவற்றை கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அரசு முதன்மை செயலாளர் ஜே. இராதாகிருஷ்ணன் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் இன்று ஆய்வு மேற்கொண்டனர்
நாகப்பட்டினம் செப்டம்பர் 22
நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஊராட்சி ஒன்றியம் கீழையூர் கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் நியாயவிலைக்கடை, ஈசனூர் ஊராட்சியில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையம் மற்றும் தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியம் கோவில்பத்து ஊராட்சியில் உள்ள நெல் சேமிப்பு கிடங்கு ஆகியவற்றை ஆய்வு மேற்கொண்டு, 131 விவசாயிகளுக்கு ரூ. 62லட்சத்து 89ஆயிரத்து 248 மதிப்பிலான பயிர் கடன்,உரம் மற்றும் வேளாண்மை இடுப்பொருட்களை கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அரசு முதன்மை செயலாளர் ஜே. இராதாகிருஷ்ணன் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் இன்று வழங்கினார்.
இக்கூட்டத்தில் கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அரசு முதன்மை செயலாளர் அவர்கள் தெரிவித்ததாவது
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் உத்தரவிற்கிணங்க விவசாயிகளின் நலன் கருதி துயரை துடைக்கும் வகையில் சாகுபடி செய்யும் நெல்லை நேரடியாக நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பதற்கான நடவடிக்கை குறித்து டெல்டா மாவட்டங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விவசாயிகள் குறுவை மற்றும் சம்பா சாகுபடி செய்யும் நெல்லை எவ்வித தட்டுப்பாடும் இல்லாமல் நேரடியாக நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்லை விற்க வேண்டும். அவ்வாறு விற்காமல் இடைத்தரகர்கள் மூலம் விற்பதை தவிர்க்கவும். இதன் முக்கிய காரணமே நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல்லானது நேரடியாக விவசாயிகளிடம் இருந்து பெறப்பட வேண்டும் என்பதே ஆகும் இடைத்தரகர்கள் அல்லது நெல் வியாபாரிகள் மூலம் விவசாயிகளிடம் நெல்லை பெற்று அவர்கள் நெல் கொள்முதல் நிலையங்களில் விற்;பதை தவிர்ப்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு 2021- 22 ஆம் ஆண்டு குறுவை பருவத்தில் நெல் 13,120 ஹெக்;டர் சாகுபடி செய்யப்பட்டு 88 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு 62,716 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. நடப்பு ஆண்டு 2022-23 குறுவை நெல் 17,196 ஹெக்டர் சாகுபடி செய்யப்பட்டு இதுவரை 1,008 ஹக்டர் அறுவடை ஆகி உள்ளது. இதுவரை 74 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு 1,188 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் கடந்த ஆண்டு 2021-22 சம்பா பருவத்தில் 64,977 ஹெக்டர் சாகுபடி செய்யப்பட்டது. நடப்பு ஆண்டில் 2022-23 இதுவரை 25,864 ஹெக்டர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.



அதனைதொடர்ந்து நாகப்பட்டினம் மாவட்டத்தில் சம்பா சாகுபடிக்காக கூட்டுறவு கடன் சங்கங்களில் இந்தாண்டு 150 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும், டெல்டா மாவட்டங்களில் இதுவரை குறுவை சாகுபடிக்காக 575 இடங்களில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது. தேவைக்கேற்ப கூடுதலாக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும் எனவும் தெரிவித்தார். தொடர்ந்து ரேசன் அரிசி வாங்க விருப்பம் இல்லாதவர்கள் கௌரவ குடும்ப அட்டைக்கு மாறிக்கொள்ள வேண்டுமெனவும், ரேசன் அரிசியை கடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும், குறிப்பாக அதனை கடத்தி அரவை மில்லுக்கு அனுப்பினால் அரவை மில் உரிமையாளரின் உரிமம் ரத்துச் செய்யப்பட்டு, சீல் வைக்கப்படும் என கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அரசு முதன்மை செயலாளர் தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது உணவுப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறை காவல் கண்காணிப்பாளர் சுஜாதா மாவட்ட வருவாய் அலுவலர் வி.ஷகிலா கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் கா.ப.அருளரசு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் சி.ராஜ்குமார் தனித்துணை ஆட்சியர் சமூக பாதுகாப்பு திட்டம் கு.ராஜன் வேளாண்மை துறை இணை இயக்குநர் ஜாக்குலா அகண்டராவ் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ.செல்வகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர் எல்விஸ் லாய் மச்சோடா.

