மாப்பிள்ளையூரணி குளம் பராமரிப்பு பணியை பஞ்சாயத்து தலைவர் சரவணக்குமார் துவக்கி வைத்தார்.
தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி பிரதான சாலையில் உள்ள முனிய கம்மா என்ற குளம் உள்ளன. அதில் பொதுமக்கள் பல்வேறு பயன்பாட்டிற்கு அதிலிருந்து கிடைக்கும் தண்ணீரை பயன்படுத்தி வருகின்றனர். சில சமயங்களில் நீராடுவதற்கும் பயன்படுத்தப்பட்டு வருகின்றனர் குளத்தின் கரை முழுவதும் கல் பதிக்கப்பட்டு முழுமையாக மாப்பிள்ளையூரணி ஊராட்சி நிர்வாகம் பாரமரித்து வருகின்றன.

பொதுமக்களின் நலன் கருதியும் தண்ணீரை சேமிப்பது குறித்தும் வரும் முன் காப்போம் என்ற கலைஞரின் திட்டத்தை போல் எதிர்வரும் மழைகாலத்திற்குள் குளத்தை முழுமையாக தேவையற்ற செடி கொடி மற்றும் தேவையில்லாத பிளாஸ்டிக் நெகிழிகள் உள்ளிட்ட பொருட்களை முழுமையாக சுத்தம் செய்து தண்ணீரை சேமிக்கும் வகையில் வெளிப்புறங்களில் முழுமையாக தூய்மை பணிகளை மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டப்பணியாளர்கள் மூலம் மேற்கொண்ட பணிகளை ஊராட்;சி மன்ற தலைவரும் கூட்டுறவு கடன் சங்க தலைவருமான சரவணக்குமார் துவக்கி வைத்தார். ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா, மகேஸ்வரி காமராஜ், ஊராட்சி செயலாளர் ஜெயக்குமார், மகாத்மா காந்தி, தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட ஓருங்கிணைப்பாளர் எபன், மற்றும் கௌதம் உள்பட பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

