நாகப்பட்டினம் ரோட்டரி சங்கமும் நாகப்பட்டினம் காடம்பாடி நகராட்சி நடுநிலைப்பள்ளி தேசிய பசுமை படையும் இணைந்து இன்று காலை உலக ஓசோன் தினமும் ஆசிரியர் தின விழாவும் நடத்தியது.
நாகப்பட்டினம் செப்டம்பர் 20
இந்த விழாவில் நாகப்பட்டினம் ரோட்டரி சங்கத்தின் தலைவர் ரொட்டேரியன் வி .பி. என். கார்த்திகேயன் தலைமையேற்றார்.இவ் விழாவில் ஆசிரியர்களை பாராட்டி நினைவு பரிசுகளை வழங்கி பள்ளி பகுதியின் உள்ளாட்சி பிரதிநிதிகள் கு. ஜோதிலட்சுமி குணா, ஜூலைகாபீவி அபூபக்கர் கலந்து கொண்டனர். வட்டார கல்வி அலுவலர் க. இளங்கோவன் கலந்துகொண்டு ஆசிரியர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார் .தேசிய பசுமை படையின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முத்தமிழ் ஆனந்தன் பள்ளியின் அனைத்து மாணவர்களுக்கும் சுமார் 400 மாணவர்களுக்கு மஞ்சள் துணிப்பை வழங்கி உலக ஓசோன் தின விழிப்புணர்வு உரையாற்றினார்.ரோட்டேரியன் ராம் பிரசன்னா மஞ்சள் பைகளை பள்ளி மாணவர்களுக்கு வழங்கினார். இவ்விழாவில் ரோட்டரி மண்டலத்தின் உதவி ஆளுநர்ரரோட்டேரியன் சந்திரசேகரன் கலந்து கொண்டு வாழ்த்துக்கள் தெரிவித்தார்.



பள்ளியின் தலைமை ஆசிரியர் ச.இளமாறன் அனைவரையும் வரவேற்று இந்த நிகழ்வு சிறப்பாக நடைபெறுவதற்கு நாகப்பட்டினம் ரோட்டிரி சங்கத்திற்கும் விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றிகளை கூறினார்.
போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர் எல்விஸ் லாய் மச்சோடா.

