• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளுர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள் மற்றும் ‘நம்ம ஊரு சூப்பரு” சிறப்பு இயக்க பணிகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் இன்று ஆய்வு மேற்கொண்டார்.

policeseithitv by policeseithitv
September 20, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளுர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள் மற்றும் ‘நம்ம ஊரு சூப்பரு” சிறப்பு இயக்க பணிகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் இன்று ஆய்வு மேற்கொண்டார்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளுர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள் மற்றும் ‘நம்ம ஊரு சூப்பரு” சிறப்பு இயக்க பணிகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் இன்று ஆய்வு மேற்கொண்டார்.

நாகப்பட்டினம் செப்டம்பர் 20

நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளுர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள் மற்றும் ‘நம்ம ஊரு சூப்பரு” சிறப்பு இயக்க பணிகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் இன்று ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது

தமிழ்நாடு அரசின் ஆணைப்படி, பாதுகாப்பான சுகாதாரம் மற்றும் தூய்மையான சுற்றுப்புறங்கள், ஆரோக்கியம் மற்றும் உற்பத்தித்திறன், பாதுகாப்பு ஆகியவை வாழ்க்கை தரத்திற்கு இன்றியமையாதது என்பதால் தற்போது ஊராட்சிகளில் சுகாதாரம், திட திரவ கழிவுகள் மேலாண்மை மற்றும் விழிப்புணர்வு முறையான வசதி இல்லாத கிராமப்புறங்களில் பொதுசுகாதாரம், குழந்தை இறப்பு, சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதாரம் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளதால் ஒருங்கிணைந்த தீர்வுகாண்பதற்கு ‘நம்ம ஊரு சூப்பரு” என்ற சிறப்பு இயக்கம் நாகப்பட்டினம் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராமபுறங்களில் சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு தொடர்பாக ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வினை மேம்படுத்திட சுகாதர நடைமுறைகள் மேம்;படுத்துதல், மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல், ஊக்குவித்தல் மற்றும் ஒருமுறை பயன்படுத்தும் நெகிழியினை தடைசெய்தல், நீர்பாதுகாப்பு மற்றும் பயன்பாடு தொடர்பான பணிகளை மேற்கொண்டு சுத்தமாகவும், பசுமையாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்கப்பட்டு வருகிறது. இன்றைய தினம் மண்ணையும் சுற்றுசூழலையும் காக்கும் பொருட்டு பிளாஸ்டிக் தவிர்த்து மஞ்சபை பயன்படுத்துவதை அவசியத்தை வலியுறுத்தும் வகையிலும் வலிவலம் கடை வீதியில் பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு மஞ்சபை வழங்கப்பட்டது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.

அதனைத்தொடர்ந்து, ஆதமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கீழ் செயல்பட்டு வரும் சாட்டியக்குடி நியாய விலைக்கடையினையும், திருப்பூண்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்துடன் இணைந்த கிராம கூட்டுறவு அங்காடியினை ஆய்வு மேற்கொண்டார். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் கீழ் வலிவலம் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் காரிப் 2022 – 23க்கான குறுவை கொள்முதலை மாவட்ட ஆட்சித்தலைவர் தொடங்கி வைத்தார். கொத்தங்குடி, ஈசனூர் ஆகிய கிராமங்களில் செயல்பட்டு வரும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டு விவசாயிகளிடம் எவ்வித குறைபாடுமின்றி நெல் கொள்முதல் செய்ய மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுதினார். கீழ்வேளுர் ஊராட்சி ஒன்றியம் வடக்காலத்தூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் 4.00 இலட்சம் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் நர்சரி கார்டனை பார்iவியிட்டும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் 2ன் கீழ் ரூ.8.65 இலட்சம் மதிப்பீட்டில் பிடாரிகுளம் தூர்வாரும் பணிகள், சுற்றுசுவர் கட்டும் பணிகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு செய்தார்.

இவ்ஆய்வின்போது, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக முதுநிலை மண்டல மேலாளர் ராஜ்குமார் திருக்குவளை வட்டாச்சியர் ராஜகுமார் கீழ்வேளுர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தியாகராஜன் மற்றும் எல்.ராஜாகோபால் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர் எல்விஸ் லாய் மச்சோடா.

Previous Post

நாகப்பட்டினம் மாவட்டம் பொரவச்சேரி ஊராட்சியில் அரசு உண்டு உறைவிட மாதிரிப்பள்ளியில் தொடு திரை கணினி வகுப்பைமாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் இன்று தொடங்கி வைத்தார்.

Next Post

நாகப்பட்டினம் ரோட்டரி சங்கமும் நாகப்பட்டினம் காடம்பாடி நகராட்சி நடுநிலைப்பள்ளி தேசிய பசுமை படையும் இணைந்து இன்று காலை உலக ஓசோன் தினமும் ஆசிரியர் தின விழாவும் நடத்தியது.

Next Post
நாகப்பட்டினம் ரோட்டரி சங்கமும் நாகப்பட்டினம் காடம்பாடி நகராட்சி நடுநிலைப்பள்ளி தேசிய பசுமை படையும் இணைந்து இன்று காலை உலக ஓசோன் தினமும் ஆசிரியர் தின விழாவும் நடத்தியது.

நாகப்பட்டினம் ரோட்டரி சங்கமும் நாகப்பட்டினம் காடம்பாடி நகராட்சி நடுநிலைப்பள்ளி தேசிய பசுமை படையும் இணைந்து இன்று காலை உலக ஓசோன் தினமும் ஆசிரியர் தின விழாவும் நடத்தியது.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In