நாகப்பட்டினம் மாவட்டம் பொரவச்சேரி ஊராட்சியில் அரசு உண்டு உறைவிட மாதிரிப்பள்ளியில் தொடு திரை கணினி வகுப்பைமாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் இன்று தொடங்கி வைத்தார்.
நாகப்பட்டினம் செப்டம்பர் 19 நாகப்பட்டினம் மாவட்டம் பொரவச்சேரி ஊராட்சியில் அரசு உண்டு உறைவிட மாதிரிப்பள்ளியில் தொடு திரை கணினி வகுப்பினை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் இன்று தொடங்கி வைத்தார்.
பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவருக்கு மாடல்ல மற்றவை என்கின்ற வள்ளுவரின் வாக்கினை மெய்ப்பிக்கும் விதம் மாணவர்களது கல்விக்கு முக்கியத்துவம் வழங்கி வருகிறார்கள். தமிழக அரசு கல்வியில் பின்னடைவுக்கான காரணங்களை ஆராய்ந்ததில் சமூக பொருளாதார கலாச்சார காரணிகள் மற்றும் பாதுகாப்பு சார்ந்த பிரச்சினைகள், புலம் பெயர் தொழிலாளர்களது பிரச்சனைகள், ஊட்டச்சத்துக்குறைபாடு, போதிய அடிப்படை வசதிகள் இல்லாமை, பள்ளிகளில் காணப்படும் குறைபாடுகள் மற்றும் வசதிகளின்மை, ஆசிரியர் பற்றாக்குறை போன்ற பலகாரணிகள் என்பது கண்டறியப்பட்டது. இவற்றை கருத்தில் கொண்டு நிதி அமைச்சர் அவர்கள் சட்டப்பேரவையில் அறிவித்தப்படி அரசு பள்ளிகளில் பயில்கின்ற மாணவர்fகள் கல்வி மற்றும் கல்வி சார்ந்த இணை செயல்பாடுகள் கலை அறிவியல், விளையாட்டு ஆகிய அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்க வாய்ப்பு வழங்கும் விதம் உருவாக்கப்பட்ட சிறப்பு திட்டத்தின் மூலம் மாதிரி பள்ளிகளை அமைப்பது இந்த அரசின் நோக்கமாகும்.


அதன் அடிப்படையில் இன்றைய தினம் நாகப்பட்டினம் மாவட்டம் பொரவச்சேரி ஊராட்சியில் அரசு உண்டு உறைவிட மாதிரிப்பள்ளியில் தொடு திரை கணினி வகுப்பினை தொடங்கி வைக்கப்பட்டது. இந்த வகுப்பினால் மாணவர்கள் கல்வி திறன் மேம்பாடு அதிகரிக்கும், கற்றலுக்கு எளிமையாக இருக்கும், மாணவர்கள் தங்களுக்கு தேவையான பாடம் குறித்த விளக்கத்தினை மிகவும் துல்லியமாக அறிந்து கொள்ள உதவும். உலகளவில் கல்வி குறித்த தகவல்களை தொடுதிரை மூலம் தெரிந்துக்கொள்ளலாம். சுமார் ரூ.1.50 இலட்சம் மதிப்பிலான இந்த தொடுதிரையினால் தமிழ் மற்றும் ஆங்கிலம் வழி கல்வி பயிலும் 80 மாணவ மாணவிகள் பய ன்பெறுகின்றனர். என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட கல்வி அலுவலர் திருநாவுக்கரசு மாவட்ட உண்டு உறைவிட பள்ளி ஒருங்கிணைப்பாளர் மகேஷ்வரன் துணை ஒருங்கிணைப்பாளர் சாந்தி மற்றும் அரசு அலுவலர்கள் உடன் கலந்து கொண்டனர்.
போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர் எல்விஸ் லாய் மச்சோடா.

