தூத்துக்குடி, செப்,16
தூத்துக்குடி மாநகராட்சி வளர்ச்சிக்கு 14 கோடி ஓதுக்கீடு செய்த தமிழக முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் நேருக்கு மேயர் ஜெகன் பெரியசாமி நன்றி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாநகராட்சி மேயராக ஜெகன் பெரியசாமி பொறுப்பேற்ற நாளில் இருந்து மாநகர வளர்ச்சிப் பணிகள் மற்றும் கட்டமைப்பு பணிகளை நேரடியாக ஆய்வு செய்து பணியை விரைப்படுத்தி வருகிறார். குறிப்பாக பருவ மழையை முன்னிட்டு வடிகால் அமைக்கும் பணியில் தனிக்கவனம் செலுத்தி வருகிறார். ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளை விரைந்து முடித்திட அதிகாரிகள் மற்றும் ஓப்பந்ததாரர்களுக்கு அறிவுரை வழங்கி பணிகளை துரிதப்படுத்தி வருகிறார்.
மேலும், மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தூய்மைப்பணிகளை மாதம் 2 மற்றும் 4ம் சனிக்கிழமைகளில் ‘மாஸ் கிளினிங்’ பணிகளும் நடைபெறுகிறது. பேருந்து நிறுத்துமிடங்களில் தேவையற்ற வால்போஸ்டர் மற்றும் சிறுமுட்புதர்களை அகற்றுவது. சாலை ஓரங்களில் உள்ள குப்பைகளை முழுமையாக அகற்றுவது போன்ற பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையர் சாருஸ்ரீ தலைமையில் தூய்மைப் பணிகளை அரசு அலுவலர்கள் தூய்மை பணியாளர்கள் மூலம் மேற்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவ, மாணவியர்கள் நலன் கருதியும், இருசக்கர வாகன ஓட்டிகளின் பாதுகாப்பு கருதியும் சாலைகளின் இருபுறமும் உள்ள மணல் திட்டுக்களை முழுமையாக அகற்ற மேயர் ஜெகன் பெரியசாமி அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். குறிப்பாக, தூத்துக்குடி பிரதான சாலையான 3வது மைல் மேம்பாலத்தில் துவங்கி தமிழ்சாலை, வ.உ.சி.சாலை வழியாக சப்கலெக்டர் அலுவலகம் வரை சாலையின் இருபுறங்களிலும் உள்ள மணல் திட்டுக்கள் அகற்றும் பணியை சிறப்பாக செய்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 2ஆம் தேதி திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்திலின் படி நகராட்சி நிர்வாகத்துறை திட்டப்பணிகள் குறித்து ஆய்வு
கூட்டம் நடைபெற்றது.

இதில் நகராட்சி நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேரு பங்கேற்றார். அந்த நேரத்தில் தூத்துக்குடி மாநகரில் மேலும் பல வளர்ச்சித் திட்டப் பணிகளுக்காக நிதி தேவைப்படுவதால் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி சில திட்ட பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய கோரிக்கைகளை அமைச்சர் நேருவிடம் கோரிக்கை வைத்தார். கோரிக்கையை ஏற்று தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர் கே என் நேரு ஆகியோர் முதற்கட்டமாக சாலை வசதிகளை மேம்படுத்துவதற்கு 14 கோடி ஓதுக்கியுள்ளார். ஓதுக்கீடு செய்த தமிழக முதலமைச்சர் முக.ஸ்டாலினுக்கும், அமைச்சர் கே.என்.நேருவுக்கும் மேயர் ஜெகன் பெரியசாமி நன்றி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாநகர் வளர்ச்சிப் பணிக்காக இரவு பகல் என்று பாராமல் உழைத்து வரும் ஜெகன் பெரியசாமி நகரின் வளர்ச்சிக்காக அரசிடம் நிதி பெறுவது போன்ற செயல் தூத்துக்குடி மாநகர மக்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தூத்துக்குடி மாநகர மக்கள் சார்பில் முதல்வர் மு க ஸ்டாலின், அமைச்சர் கே என் நேரு, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமிக்கு பாராட்டுகள் குவிகிறது.
செய்தி தொகுப்பு
ஆத்தி முத்து.

